Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவும் 34 பந்துகளில் எல்லாம் அரை சதம் கடந்தார். முல்லான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கினர். ஒரு பவுண்டரி எடுத்த நிலையில் பெரிய ஷாட் ஆட முற்பட்டு பவுண்டரி லைனில் ரபாடா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

IPL 2024 PBKS vs MI- Suryakumar yadav dedicated his half century to captain Hardik Pandya

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.சூரியகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்தது சூரியகுமார் யாதவுக்கு பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது.

ஆனால் அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில் இன்று சூரிய குமார் யாதவ் ஒரு சம்பவம் செய்தார். வழக்கம் போல் அணிக்காக விளையாடிய சூரியகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் என விரட்டினார். இதன் மூலம் 34 பந்துகளில் சூரிய குமாரியாதவ் அரை சதத்தை கடந்தார். அரை சதம் அடித்த பிறகு பவுண்டரி லைனில் அமர்ந்திருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பார்த்து இந்த அரை சதம் உனக்காக தான் என்பது போல் செய்கைகை காட்டினார்.

சூரியகுமார் 50 ரன்கள் அடித்த பிறகு ஹர்திக் பாண்டியாவும் கைத்தட்டி சூரிய குமாருக்கு வரவேற்பு தெரிவித்தார்.இதன் மூலம் மும்பை அணியில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஒவ்வொரு வீரர்களின் வெற்றியை மற்ற வீரர்கள் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி 11.5 ஓவர்கள் எல்லாம் 100 ரன்ளை கடந்தது.மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 25 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவர் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடித்தார்.

Story first published: Thursday, April 18, 2024, 21:15 [IST]
Other articles published on Apr 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+