Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

34 வயதில் ஓய்வு பெற்று கிளம்பலாம்.. பஞ்சாப் வீரரை கதற விட்ட பாட் கம்மின்ஸ்.. என்ன நடந்தது?

முல்லான்பூர் : பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை டக் அவுட் ஆக்கி அனுப்பினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்.

2024 ஐபிஎல் தொடரின் 23வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

IPL 2024 PBKS vs SRH Jonny Bairstow lose his wicket to Pat Cummins for 4th time in T20

அடுத்து சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் - பாட் கம்மின்ஸ் ஜோடியிடம் முதல் மூன்று விக்கெட்களை இழந்தது.

இதில் பாட் கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ மூன்று பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். டி20 போட்டிகளில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாமல் திணறுவதோடு விக்கெட்டையும் இழந்து வருகிறார் பேர்ஸ்டோ.

இதுவரை 6 டி20 இன்னிங்க்ஸ்களில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் பேட்டிங் செய்துள்ள பேர்ஸ்டோ மொத்தமாக 31 பந்துகளை சந்தித்து 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், அந்த ஆறு இன்னிங்க்ஸ்களில் 4 முறை கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டையும் பறிகொடுத்து இருக்கிறார்.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோசமான ஃபார்மில் இருக்கிறார் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ. இங்கிலாந்து டி20 அணியிலும் கடந்த ஓராண்டாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 2024 ஐபிஎல் தொடரிலும் இதுவரை 5 போட்டிகளில் 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 34 வயதாகும் நிலையில் மோசமான ஃபார்மில் இருக்கும் பேர்ஸ்டோ கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெறலாம் என்ற நிலையில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர்கள் சொதப்பிய நிலையில் அசுதோஷ் சர்மா 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தும், ஷஷான்க் சிங் 25 பந்துகளில் 46 ரன்கள் குவித்தும் அந்த அணியை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றனர். எனினும், 2 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, April 9, 2024, 23:10 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+