Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹார்ட் பீட்டை எகிற வைத்த மேட்ச்.. கடைசி ஓவரில் நடந்த சம்பவம்.. பயந்து போன சன்ரைசர்ஸ்.. என்ன நடந்தது?

முல்லான்பூர் : பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடைசி ஓவரில் தோல்வி பயத்தை காட்டியது அசுதோஷ் சர்மா - ஷஷான்க் சிங் ஜோடி.

2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே அதிரடி ஆட்டம் ஆடி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

IPL 2024 PBKS vs SRH SRH won by 2 runs as Ashutosh Sharmam Shashank hit hard

அந்த அணியின் நிதிஷ் ரெட்டி 37 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். அப்துல் சமத் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் ஷாபாஸ் அஹ்மத் 7 பந்துகளில் 14 ரன்கள் அடித்தார். இதை அடுத்து 9 விக்கெட்கள் வீழ்ந்த போதும் ஹைதராபாத் அணி 182 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை எட்டியது.

எட்டி விடக் கூடிய இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 5 ஓவர்களில் பேர்ஸ்டோ 0. ஷிகர் தவான் 14, பிரப்சிம்ரன் சிங் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். சாம் கர்ரன் அணியைக் காக்கப் போராடி 22 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். சிக்கந்தர் ராசா 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

அதன் பின் வந்த ஷஷான்க் சிங் அதிரடி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை திணற வைத்தார். ஆனால், பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தேவையான ரன்கள் அதிகம் இருந்ததால் ஹைதராபாத் அணி நிம்மதியாக இருந்தது.

ஜிதேஷ் சர்மா 11 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின் மற்றொரு அதிரடி பேட்ஸ்மேன் அசுதோஷ் சர்மா, ஷஷான்க் சிங் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டி போலவே இந்த ஜோடி அபார ஆட்டம் ஆடியது. கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலைக்கு போட்டியை கொண்டு வந்தனர்.

ஜெயதேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் அசுதோஷ் சர்மா சிக்ஸ் அடித்தார். அடுத்து இரண்டு வைடுகள் வீசப்பட்டன. அடுத்து இரண்டாவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளில் 5 ரன்கள் கிடைத்தன.

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டி சென்றது. அசுதோஷ் சர்மா பேட்டிங் நின்று இருந்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தால் பஞ்சாப் வெற்றி பெற்று விடும் என்ற நிலையில், அதுவரை கம்பீரமாக இருந்த ஹைதரபாத் அணி கதிகலங்கிப் போனது. நல்லவேளையாக ஐந்தாவது பந்தில் அசுதோஷ் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி பந்தில் ஷஷான்க் ஒரு சிக்ஸ் அடித்தார். இதை அடுத்து வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, April 9, 2024, 23:38 [IST]
Other articles published on Apr 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+