Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே, ஆர்சிபி இரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.. ஹர்பஜன் சொன்ன புது கணக்கு.. எப்படி?

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணி தற்போது அபாரமாக விளையாடி வருகிறது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார்கள்.

IPL 2024 Playoffs - Harbhajan singh Predicts Both CSK and RCB Will qualify for Playoffs

இதனால் வரும் மே 18ஆம் தேதி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதும் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இதில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு செல்ல முடியும். இதுவே ஆர் சி பி அணி வெற்றி பெற வேண்டும் என்றால் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.

இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹரபஜன் சிங், வெளியிட்டுள்ள வீடியோவில் பிளே ஆப் சுற்றுக்கு ஆர் சி பி, சி எஸ் கே என இரண்டு அணிகளுமே செல்ல வாய்ப்பு இருப்பதாக புதிய கணக்கை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு தம்மை பொருத்தவரை கொல்கத்தா, ராஜஸ்தான், சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர் விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் நீண்ட சீசன்களாக ஆர்.சி.பி தான் கோப்பையை இதுவரை வெல்லவில்லை. இதனால் நடப்பு சீசனில் அவர்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் சன்ரைசர்ஸ் அணி, தம்மை பொறுத்தவரை விளையாட்டுக்கு செல்லாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதாவது சன்ரைசர்ஸ் அணி தற்போது 12 போட்டிகள் விளையாடி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. அவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிராக எஞ்சிய ஆட்டங்களில் விளையாட வேண்டும். இதில் இரண்டிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று விட வேண்டும். இதே போல் லக்னோ அணி டெல்லி அல்லது மும்பை அணிக்கு எதிரான ஒரு போட்டியில் தோற்க வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்றால் கூட இரண்டு அணிகளும் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 14, 2024, 16:41 [IST]
Other articles published on May 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+