Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 எலிமினேட்டரில் ஆர்சிபி vs ராஜஸ்தான் மோதல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு

மும்பை : இறுதி ஆட்டத்திற்கு சென்றுள்ள கேகேஆர் அணியினர் , மீதி மேட்ச்சுகளின் போக்குகளை உற்று நோக்குவார்கள்.இன்றைய ஆட்டத்தில், போட்டியின் ஆரம்ப கட்டங்களில் வெற்றி வாகை சூடிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் இல்லாதது ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கிலும், வழி நடத்துவதிலும் மிக சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அஸ்வின், முதலிலேயே அவருடைய 4 ஓவர்களை போட்டு விட்டால் , அவரது அணிக்கு சாதகமாக அமைய கூடும். போல்ட், சஹல் , ஆவேஷ் கான் போன்றவர்கள் கடைசி கட்ட ஓவர்கள் வரையில் இருந்து தாக்குப் பிடித்து செயல்பட முடியும்.

IPL 2024 Playoffs rcb vs rr preview in tamil - who will win in todays game

பெங்களூரு அணி கோலியின் அதிரடி ஆட்டம் மற்றும் கூடுதல் ரன்களை நம்பி உள்ளது. அதே சமயத்தில்.ஆர் ஆர் அணியினர், கோலியின் விக்கெட்டை எவ்வளவு விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருப்பார்கள்.கேப்டன் டூ பிளஸிஸ்-ன் அனுபவம் கை கொடுக்க வேண்டும். வெற்றி பெற்றால் தான் அடுத்த கட்டம் என்ற do or die situation அழுத்தம் கொடுக்கும் என்பது அறிந்ததே.

மேக்ஸ் வெல், ரஜத் பட்டிதார் பேட்டிங்கில் சோபிக்க வேண்டும். தினேஷ் கார்த்திக், விளையாடியுள்ள பல மேட்ச்சுகளில் எதிர் கொண்டவை , அவரது பேட்டிங்கிற்கு இன்று உதவும் என்று எதிர் பார்க்கலாம்.

சிராஜ், பெர்கூசன் மற்ற பவுலர்கள் தங்கள் முழு திறமைகளை வெளிப் படுத்த வேண்டிய நேரம் இது. இரண்டு அணிகளும் எதிரணியினரின் நிறை, குறைகள் பற்றி அறிந்து இருப்பதால், அதற்கு ஏற்ப தயார் செய்து விளையாடுவார்கள், இந்த முக்கிய ஆட்டத்தில்.

முக்கியமாக இந்த அழுத்தம் மிக்க ஆட்டத்தில் நன்றாக பீல்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் பலம் கிட்டும். கேட்சுகளை நழுவ விடாமல் பிடிக்கவும், பந்துகளை தடுத்து ரன்களை தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டும்.இவ்வளவு தூரம் இரண்டு அணிகளும் வந்துள்ளதால் , எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் . ஆனால் எந்த அணி, அணியாக ஒன்று சேர்ந்து ஆடுகின்றதோ, அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Wednesday, May 22, 2024, 16:08 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+