Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 - புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்.. சிஎஸ்கேவின் முதல் தோல்வியால் ஏற்பட்ட சரிவு

சென்னை : ஐபிஎல் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய சிஎஸ்கே அணி 7 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.எனினும் கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 எடுத்தது.

IPL 2024 Points table - CSK Lose their first Place after lost vs Delhi capitals

இந்த நிலையில் சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி பெற்று தற்போது முதல் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே தங்களுடைய முதல் இடத்தில் இருந்து சரிந்து இரண்டாவது இடத்திற்கு சென்று விட்டது. தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் கொல்கத்தா அணி இருக்கிறது. கே கே ஆர் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளனர்.

அவர்களுடைய ரன் ரேட் 1.04 என்ற அளவில் இருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி ஒன்று தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே ரன் ரேட் 0.97 என்ற நிலையில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் 0.80 என ரன் ரேட் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

குஜராத் அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. அவர்களுடைய ரன் ரேட் மைனஸ் 0.73 என்ற நிலையில் இருக்கிறது. ஐதராபாத் அணி 2 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. லக்னோ 2 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் தற்போது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள டெல்லி அணி இரண்டு புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. அவர்களுடைய ரன் ரேட் மைனஸ் 0.01 என்ற அளவில் இருக்கிறது. எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணி இரண்டு புள்ளிகள் உடனும், ஒன்பதாவது இடத்தில் rcb அணி புள்ளிகளுடனும் இருக்கிறது. மும்பை அணி வெற்றி கணக்கை தொடங்காமல் பத்தாவது இடத்தில் உள்ளது.

Story first published: Monday, April 1, 2024, 0:05 [IST]
Other articles published on Apr 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+