Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது. லக்னோ மற்றும் கே கே ஆர் அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிட்டு விட்டது. இந்த நிலையில் முதல் வார முடிவில் ஐபிஎல் புள்ளி பட்டியலில் எந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணிகளாக சிஎஸ்கே அணியும் ராஜஸ்தானும் இருக்கிறது. இரு அணிகளுமே தற்போது நான்கு புள்ளிகளை பெற்றிருக்கிறது. இதனால் தற்போது புள்ளி பட்டியலில் யார் முதல் இடத்தில் இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

IPL 2024 Points table - Which team places in top 4 full details

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளை பெற்றிருந்தாலும் குஜராத் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அவர்கள் ரன் ரேட்டில் 1.97 என்ற அளவில் இருப்பதால் சிஎஸ்கே முதலிடத்தில் இருக்கிறார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய இரண்டு ஆட்டங்களில் வென்று நான்கு புள்ளிகளை பெற்று 0.80 என்ற ரன் ரெட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி 2 புள்ளிகளை பெற்று 0.67 என்ற ரன் ரேட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளன. கே கே ஆர் அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதன் ரன் ரேட் 0.20 என்ற அளவில் இருக்கிறது. பஞ்சாப் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

ஆறாவது இடத்தில் ஆர்சிபி அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருக்கிறது. ஆனால் ஆர் சி பி ரன் ரேட் மைனஸ் 0.18 என்ற அளவில் இருக்கிறது. குஜராத் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் மைனஸ் 1.42 என்ற ரன் ரெட்டில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

டெல்லி அணியை பொருத்தவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே தோல்வியை தழுவி மைனஸ் 0.52 என்ற ரன் ரேட்டுடன் எட்டாவது இடத்திலும், ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளி ஏதுவும் இல்லாமல் மைனஸ் 0.92 என்ற ரன் ரேட்டுடன் ஒன்பதாவது இடத்தில உள்ளது. லக்னோ அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் தோல்வியை தழுவி மைனஸ் 1.00 என்று ரன் ரேட்டுடன் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

Story first published: Friday, March 29, 2024, 7:07 [IST]
Other articles published on Mar 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+