Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : 2 போட்டிகளில் தொடர் தோல்வி.. சரிந்த ரன்ரேட்.. புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவுக்கு எந்த இடம்?

ஐதராபாத் : சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வென்றதன் மூலமாக புள்ளிப்பட்டியல் நடந்துள்ள மாற்றங்களை பார்க்கலாம்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

IPL 2024 Pointstable SRH moves to 5th spot after the victory against CSK at Hyderabad

இதன் மூலமாக ஐதராபாத் அணி இந்த சீசனில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக 7வது இடத்தில் இருந்த ஐதராபாத் அணி, சிஎஸ்கே அணியை வீழ்த்தியதன் மூலமாக 5வது இடத்திற்கு வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் +0.204 என்ற ரன் ரேட்டில் இருந்து +0.409 என்ற ரன்ரேட் வரை முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல் இந்த போட்டிக்கு முன் சிஎஸ்கே அணி 4 புள்ளிகள் பெற்று 3வது இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால் +0.976 என்ற ரன்ரேட்டில் இருந்த சிஎஸ்கே அணி +0.517 என்ற ரன்ரேட்டிற்கு குறைந்துள்ளது.

சொந்த மண்ணில் ஆடிய 2 போட்டிகளிலும் வென்ற சிஎஸ்கே, வெளி மைதானங்களில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். அதேபோல் ஐதராபாத் அணியின் முன்னேற்றத்தால் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் 6வது இடத்தில் இருந்த குஜராத் அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்தில் இருக்கும் 5 அணிகள் 4 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகள் நடக்கும் போது புள்ளிப்பட்டியலில் எண்ணற்ற மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, April 5, 2024, 23:30 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+