Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ.. ரிங்கு சிங்குக்கு முன்பே ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்தவர் இவர்தான்..கதிகலங்க வைத்த மேட்ச்

மும்பை : 2023 ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கடைசி ஓவரில் 5 சிக்ஸ் அடித்து வெற்றி பெறவே முடியாது என நினைத்த போட்டியில் வெற்றி தேடித் தந்தார். அது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய அளவில் பரவியது.

ஆனால், ரிங்கு சிங்குக்கு முன்பே வேறு ஒரு வீரர் இதே போல ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து வெற்றி பெறவே முடியாது என நினைத்த போட்டியில் வெற்றி தேடித் தந்துள்ளார். அந்த வீரர் ராகுல் டேவாட்டியா.

IPL 2024 Rahul Tewatia hit 5 sixes in an over 3 years before Rinku Singh


2020இல் ஷார்ஜாவில் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய ராகுல் டேவாட்டியா ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து இருந்தார். அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 223 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களும், கே எல் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் குவித்து இருந்தனர்.

அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அடுத்து சஞ்சு சாம்சன், ராகுல் டேவாட்டியா பேட்டிங் செய்தனர். சஞ்சு சாம்சன் தனி ஆளாக ரன் ரேட்டை உயர்த்த போராடிக் கொண்டு இருந்தார். ஆனால், ராகுல் 19 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து சோதித்தார். அவரால் பந்தை சரியாக அடிக்க முடியவில்லை.

எனினும், பின்னர் சுதாரித்த ராகுல் டேவாட்டியா, வெறும் சிக்ஸர்களை மட்டுமே அடிப்பது என முடிவு எடுத்தார். எனினும், அவரால் 17வது ஓவர் வரை ஒரு சிக்ஸ் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனிடையே சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவர்களில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷெல்டன் காட்ரல் வீசிய 18வது ஓவரில் முதல் நான்கு பந்தில் நான்கு சிக்ஸ் அடித்தார். பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்திலும் ஒரு சிக்ஸ் அடித்தார். ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்து மிரள வைத்தார் ராகுல் டேவாட்டியா.

அடுத்த ஓவரில் ராபின் உத்தப்பா ஆட்டமிழந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு சிக்ஸ், ராகுல் ஒரு சிக்ஸ் அடித்தனர். ராகுல் டேவாட்டியா 31 பந்துகளில் 53 ரன்கள் குவித்து 19வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முருகன் அஸ்வின் ஒரு ஃபோர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

அந்தப் போட்டியில் தனது நிதான ஆட்டத்தால் தோல்வியை நோக்கி சென்ற போட்டியை தானே மாற்றினார் ராகுல் டேவாட்டியா. அந்த சீசனில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு 14 போட்டிகளில் 255 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது பேட்டிங் சராசரி 42.50 ஆக இருந்தது. எனினும் அதற்கு அடுத்த ஆண்டுகளில் அவரால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது.

Story first published: Sunday, March 17, 2024, 14:31 [IST]
Other articles published on Mar 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+