Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை பெய்தால், சிஎஸ்கேவை விட ஆர்சிபிக்கு தான் நல்லது.. கடைசியில் காத்திருக்கும் வேட்டு

பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கியமான ஆட்டம் என்றால் அது மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையும் பெங்களூரு மோதும் ஆட்டமாக தான் இருக்கும். தற்போது சிஎஸ்கே அணி 14 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

பெங்களூர் அணி 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கின்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அப்படி பெரும் பட்சத்தில் பிளே ஆப்க்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றால் அது மிகப்பெரிய தோல்வியாக அமைந்து விடக்கூடாது

IPL 2024 - Rain delay short games will give advantage to RCB over CSK

குறைந்தபட்சம் 18 ரன்களுக்குள் இந்த தோல்வி அமைய வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் வரும் சனிக்கிழமை பெங்களூருவில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக பல தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை ஒரு ஓவர் கூட வீச முடியாத நிலையில் ஆட்டம் தடை பட்டால் சிஎஸ்கே அணி 15 புள்ளிகளை பெற்று பிளே ஆப்க்கு செல்லும்.

ஆனால் மழை லேசாக குறிக்கிட்டு ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டால், அது சிஎஸ்கே வை விட ஆர்சிபிக்கு தான் சாதகமாக அமையும். ஏனென்றால் பெங்களூர் சின்னசாமி மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இங்கு எட்டு ஓவர்கள் இல்லை, ஐந்து ஓவர்கள் என சுருக்கி போட்டிகள் நடத்தப்பட்டால், டாஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும்.

அதில் சிஎஸ்கே முதலில் பந்து வீசினால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் சிஎஸ்கேவுக்கு பெரிய ஆப்பாக அது அமையும். ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் சிஎஸ்கேவை விட ஆர் சி பி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள். கோலி, டுபிளசிஸ், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் என பல அதிரடி வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

இதைப் போன்று முகமது சிராஜ் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி தடுமாறக்கூடும். மேலும் மழை பெய்வதால் தங்களுடைய பலமான சுழற் பந்துவீச்சாளர்களையும் சிஎஸ்கே அணி பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதனால் மழை பெய்தால் சுத்தமாக போட்டி நடைபெறாத வகையில் பெய்ய வேண்டும். இல்லையெனில் பெய்யவே கூடாது. அப்படியும் மழை பெய்து போட்டி சுருக்கப்பட்டால் சென்னைக்கு சாதகமாக டாஸ் விழ வேண்டும்.

Story first published: Thursday, May 16, 2024, 7:19 [IST]
Other articles published on May 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+