Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு மேல் கேவலப்படுத்த முடியாது.. ரோகித்துக்காக ரெய்னா செய்த காரியம்.. மும்பை அணி மீது விமர்சனம்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து கேப்டன் ஆக நீக்கப்பட்டிருக்கும் சம்பவம் அந்த அணி ரசிகர்களை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இதனால் வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணிக்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம் என்று பல ரசிகர்களும் எதிர்ப்பைக் கிளப்பி வருகிறார்கள்.

பல முன்னாள் வீரர்களும் மும்பை அணியின் இந்த நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரெய்னா, ரோகித் சர்மாவுக்காக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

IPL 2024 - Raina showing his gesture to support Mumbai indians

ஐபிஎல் மினி ஏலத்தின் போது சுரேஷ் ரெய்னா ஜியோ சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மினி ஏலத்தில் எந்த இரண்டு அணிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்று நெறியாளர் கேள்வி கேட்டார். அப்போது ரெய்னாவிடம் சிஎஸ்கே கொடியும் மும்பை அணியின் கொடியும் வழங்கப்பட்டது முதலில் மும்பை அணியின் கொடியை வாங்கிய ரெய்னா, ரோகித் சர்மாவுக்காக நான் இதை தூக்க மாட்டேன் என்று கூறி சிரித்தார்.

அதன் பிறகு சென்னை அணியின் கொடியை எடுத்துக் காட்டினார். ரெய்னாவின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக்கியிருக்கிறது. பலரும் ரெய்னாவின் இந்த செயலை பாராட்டி வருகிறார்கள். ரோகித் ரசிகர்களுக்காக ரெய்னா தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படையாக தைரியமாக வெளிப்படுத்தி விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

மும்பை அணிக்கு பரம எதிரி என்றால் அது சிஎஸ்கே தான். இந்த நிலையில் சிஎஸ்கே சார்பாக களமிறங்கிய ரெய்னா, மும்பைக்கு எதிராக 34 இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். இதில் அவர் 824 ரன்கள் அடித்திருக்கிறார்.140 என்ற அளவில் இருந்திருக்கிறது. இதனால் மும்பைக்காக ரோகித் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பது ரெய்னாவுக்கு தான் தெரியும்.

இதனால் தான் ரெய்னா வெளிப்படையாக மும்பை அணியின் இந்த முடிவை விமர்சித்து இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது சரிதான் என்று மும்பை இந்தியன்ஸ் க்கு ஆதரவாக இதுவரை யாருமே வாயை திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 22, 2023, 17:49 [IST]
Other articles published on Dec 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+