Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இயற்கை மீது பழியை போட்ட ஆர்சிபி கேப்டன்.. தோற்றது இங்கு தான்.. ஏமாற்றத்துடன் பேசிய டுபிளசிஸ்

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பிளே ஆப் சுற்றில் இருந்து ஆர் சி பி அணி வெளியேறியது. எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர் கொண்ட ஆர் சி பி அணி வழக்கம் போல் பல தவறுகளை செய்து தோல்வியை தழுவியது. இதனால் 17வது சீசன் ஆக கோப்பையை வெல்ல முடியாமல் ஆர் சி பி அணி வென்றிருக்கிறது.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள டுப்ளசிஸ், இயற்கை மீது பழியை போட்டு தப்பித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பனிப்பொழிவு என்று அதிகமாக இருந்தது. எங்களுடைய தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

IPL 2024 - RCB Captain Duplessis blames dew for the loss vs Rajasthan in eliminator

பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் இந்த இலக்கு கொஞ்சம் கூட பத்தாது. நாங்கள் இன்னும் ஒரு 20 ரன்கள் அதிகமாக அடித்திருந்தால் அது நிச்சயம் இந்த ஆடுகளத்தில் நல்ல இலக்காக அமைந்திருக்கும். எனினும் எங்கள் அணி வீரர்கள் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த தொடரின் பிற்பகுதியில் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அதை தான் ஒரு கேப்டனாக என் வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்க முடியும்.

இன்றைய ஆடுகளத்தை பார்க்கும் போது 180 ரன்கள் எடுத்தால் போதும் என்று நினைத்தோம். எனென்றால் பந்து தொடக்கத்தில் கொஞ்சம் ஸ்விங் ஆனது. பின்னர் தோய்வாக மாறியது. இந்த தொடரில் இருந்து நான் கற்றுக் கொண்டது, இம்பேக்ட் விதியின் மூலம் இனி இந்த மைதானத்திற்கு இந்த இலக்கு போதுமானது என்று இனி நினைக்கவே முடியாது.மேலும் பனிப்பொழிவு இருப்பதால் நிச்சயம் பந்து வீசும் அணிக்கு கடினமாக இருக்கும்.

நாங்கள் முதல் சில போட்டிகளில் தோல்வியை தழுவினோம். இதே மற்ற அணிகளாக இருந்திருந்தால் நிச்சயம் எழுச்சி பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் மீண்டும் எழுந்து தொடர்ந்து ஆறு போட்டிகளை வென்றோம். இதன் மூலம் எங்கள் அணியின் திறன் மற்றும் உத்வேகம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் ஸ்பெஷல் ஆக எதையும் செய்யவில்லை. அதனால் தான் தோல்வியை தழுவினோம் என்று ஆர்சிபி கேப்டன் டுபிளசிஸ் கூறினார்.

Story first published: Thursday, May 23, 2024, 0:10 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+