Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிலாம் இருந்தால் வேலைக்கு ஆகாது.. ஆக்ரோஷமாக இரு.. ஆர்சிபி வீரருக்கு ஏபி டிவில்லியர்ஸ் அறிவுரை

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே உள்ளது. இதில் பல வீரர்கள் காயத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு வர ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த நிலையில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. .

அதில் ரஜத் பட்டிதார் என்ற திறமை வாய்ந்த வீரரை ஆர் சி பி தக்க வைத்துக் கொண்டது. காயம் காரணமாக கடந்த சீசனில் விளையாடாத ரஜத் பட்டிதார் தற்போது முழு உடல் தகுதியை பெற்று இருக்கிறார்.

IPL 2024 - RCB Legend AB Devilliers Gives advice to Rajat patidar


இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருக்கிறார். இந்த நிலையில் ரஜத் பட்டிதாருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் அறிவுரை வழங்கியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ரஜத் பட்டிதார், ஒரு சிறந்த வீரர் நான் அவர் உடன் ஆசிபி அணிக்காக சில காலம் விளையாடி இருக்கிறேன்.

அவர் இன்னும் இளம் வீரராக இருக்கிறார். தற்போது நல்ல அனுபவம் அவருக்கு கிடைத்திருக்கும். ரஜத் பட்டிதாரின் பேட்டிங் நுணுக்கம் அவருடைய இயல்பு எல்லாமே நன்றாக தான் இருக்கிறது. ஒரு சிறந்த வீரராக மாறுவதற்கான அனைத்து தகுதியுமே அவரிடம் இருக்கிறது. ஆனால் நான் ஒன்றை மட்டும் அவரிடம் பார்க்க ஆசைப்படுகிறேன். இன்னும் கொஞ்சம் உத்வேகமும் சண்டை போடும் குணமும் இருக்க வேண்டும்.

ஏனென்றால் ரஜத் பட்டிதார் மிகவும் நல்லவராக இருக்கிறார். களத்தில் அமைதியாக நல்லவனாக இருப்பது தவறு என நான் நினைக்கிறேன். அது அவருக்கு சரிவை கூட ஏற்படுத்தலாம். எனவே அவர் கொஞ்சம் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும். எப்படி இருந்தாலும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். காயம் அடைந்த பிறகும் ஆர் சி பி அணி அவரை தக்க வைத்துக் கொண்டிருப்பது நிச்சயம் நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ள டிவிலியர்ஸ் நடப்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நீங்கள் வேறு ஒரு விராட் கோலியை பார்ப்பீர்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story first published: Tuesday, December 12, 2023, 13:55 [IST]
Other articles published on Dec 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+