Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சம்மட்டி அடி.. விராட் கோலி, ரோஹித் அணிகளுக்கு நேர்ந்த கதி.. பிளே-ஆஃப் போவதே சந்தேகம்

பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தந்து பிளே-ஆஃப் வாய்ப்பை சிக்கலானதாக மாற்றிக் கொண்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய இரு பெரும் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப் போவதே சந்தேகம் என்ற நிலையில் இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அதனால், இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எப்படி ஆடப் போகிறார்கள், அவர்களது அணிகள் பிளே-ஆஃப் முன்னேறுமா? என பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர் ரசிகர்கள்.

IPL 2024 - RCB Play Off chances became dim after third loss in four matches

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. மறுபுறம் பெங்களூரு அணி தான் ஆடிய நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகள், ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் முன்னேறும் வாய்ப்பு எளிதாக இருக்கும். அதை விட்டு விட்டால் பின்னர் நெட் ரன் ரேட் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த இரண்டு ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடர்களில் லீக் சுற்றில் எட்டு வெற்றிகளை பெற்ற அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் முன்னேறின.

அந்த வகையில் 2024 ஐபிஎல் தொடரில் துவக்கத்திலேயே மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தனக்கு மீதமுள்ள 11 லீக் போட்டிகளில் 8 வெற்றிகளை பெற வேண்டும். அதே போல பெங்களூரு அணி தனக்கு மீதிமிருக்கும் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற வேண்டும். இரண்டு அணிகளும் பந்துவீச்சில் சில பலவீனங்களை கொண்டு இருப்பதால் அதிக வெற்றிகளை பெறுவது சந்தேகமே.

Story first published: Wednesday, April 3, 2024, 0:01 [IST]
Other articles published on Apr 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+