For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சொந்த ஊரில் ஆர்சிபிக்கு ராசியே இல்ல.. லக்னோ பவுலிங்கில் ஆல் அவுட்டான RCB

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி தங்களுடைய மூன்றாவது தோல்வியை தழுவி இருக்கிறது. எப்போதுமே ஒவ்வொரு அணிக்கும் தங்களுடைய சொந்த மண் என்பது மிகவும் ராசியாக இருக்கும். ஆனால் ஆர் சி பி க்கு மட்டும் அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவது என்பது எப்போதுமே சாபமாக இருக்கும்.

இந்த வகையில் லக்னோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் ஆர்சிபி அணி தோல்வியை தழுவி இருக்கிறது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கே எல் ராகுல் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 20 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழதார்.

IPL 2024 - RCB registered another loss in home ground vs LSG

கே எல் ராகுல் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய நிலையில் அதிரடியாக ஆட முற்பட்டு தன்னுடைய விக்கெட்டை இழந்தார். இதேபோன்று கர்நாடகா வீரரான டேவுதட் படிக்கலும் 11 பந்துகளை எதிர் கொண்டு 6 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய குயிண்டன் டிகாக் ஆர் சி பி இன் பந்துவீச்சை சிதறடித்தார்.
இதில் ஐந்து இமாலய சிக்சர்களும் எட்டு பவுண்டரிகளும் அடங்கும்.

இதன் மூலம் 56 பந்துகளில் குயிண்டன் டி காக் 81 ரன்கள் சேர்த்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரான் 5 சிக்ஸர்கள் விளாசி 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆர் சி பி அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியது.

கேப்டன் விராட் கோலி 16 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.

அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் டுபிளசிஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் லக்னோ அணியில் இடம் பெற்றிருக்கும் அதிவேக பவுலரான மாயங் யாதவ், அபாரமாக பந்து வீசி மேக்ஸ்வெல் மற்றும் கேமரான் கிரீன் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் ரஜத் பட்டிதார் 29 ரன்களில் வெளியேறினார்.

இதனால் ஆர் சி பி அணி தடுமாறியது. இறுதியில் மஹிப்பால் லோம்லார் 13 பந்துகளை எதிர் கொண்டு 33 ரன்கள் சேர்த்தார். ஆனால் அவருக்கு யாருமே கீழ் வரிசையில் துணை நிற்கவில்லை. இதன் காரணமாக ஆர் சி பி அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

Story first published: Tuesday, April 2, 2024, 23:51 [IST]
Other articles published on Apr 2, 2024
English summary
IPL 2024 - RCB registered another loss in home ground vs LSG சொந்த ஊரில் ஆர்சிபிக்கு ராசியே இல்ல.. லக்னோ பவுலிங்கில் ஆல் அவுட்டான RCB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+