For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 : இதுக்கா ஐபிஎல் ஆட வந்தோம்.. சோகத்தில் ஆர்சிபி வீரர்கள்.. இனி ஒரு தப்பு நடந்தாலும் சோலி முடிந்தது

பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது. இன்னும் ஒரு தவறு நடந்து ஒரு போட்டியில் தோல்வி அடைந்தால் கூட பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

இதுவரை ஏழு போட்டிகளில் ஆடி உள்ள பெங்களூரு அணி அதில் ஒரு வெற்றி மற்றும் ஆறு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அதன் மூலம் வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது பெங்களூரு அணி. அந்த அணிக்கு இன்னும் ஏழு போட்டிகள் மீதமுள்ளன. அந்த ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எட்டு வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற முடியும்.

IPL 2024 RCB Royal Challengers Bengaluru has to win seven consecutive matches to go to play offs

2022 ஐபிஎல் தொடர் முதல் பத்து அணிகள் பங்கேற்று வரும் நிலையில் 2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் 8 வெற்றிகளை பெற்ற அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. அந்த வகையில் தற்போது படுமோசமான நிலையில் இருக்கும் பெங்களூரு அணியும் எட்டு வெற்றிகளை பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

ஒரு வேளை இரண்டு அணிகள் எட்டு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் இருந்தால் எந்த அணி அதிக நெட் ரன் ரேட் வைத்து இருக்கிறதோ அந்த அணியே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். தற்போது இருக்கும் பத்து அணிகளில் பெங்களூரு அணியே மோசமான நெட் ரன் ரேட் வைத்துள்ளது. -1.185 என்ற அளவிற்கு மோசமான நெட் ரேட் வைத்துள்ளது பெங்களூரு அணி. இந்த நெட் ரன் ரேட் அதிகமாக அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, அதில் சில பெரிய வெற்றிகளையும் பெற வேண்டும். அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது சேசிங்கில் அதிக பந்துகள் மீதமிருக்கும் வகையில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது பெங்களூரு அணியின் பந்துவீச்சு மோசமாக இருக்கும் நிலையில் அந்த அணி தொடர்ந்து ஏழு போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு. ஒரு சிறு தவறு நடந்து ஒரு போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பின்னர் பல பெங்களூரு அணி வீரர்கள் சோகத்துடன் இருந்தனர். அந்த அணியின் கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் பேசுகையில் கூட, தொடர் தோல்விகளால் வீரர்கள் மன உறுதியின்றி இருப்பதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 16, 2024, 11:00 [IST]
Other articles published on Apr 16, 2024
English summary
IPL 2024 RCB : Royal Challengers Bengaluru has to win seven consecutive matches to go to play offs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+