Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொளந்து கட்டிய ஆர்சிபி.. அந்த 2 தங்கத்தையும் விட்றாதீங்க சார்.. எத்தனை டாட் பால்கள் தெரியுமா?

பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பவுலர்கள் இணைந்து மொத்தமாக 38 டாட் பால்கள் வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஆர்சிபி அணி தரப்பில் கேப்டன் டூ பிளசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும், ரஜத் பட்டிதர் 41 ரன்களும் விளாசினர்.

IPL 2024 RCB vs CSK CSK bowlers bowled a 38 dot balls against RCB at Bangalore which changed the game

சிஎஸ்கே அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 61 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்கள் மிரட்டலாக செயல்பட்டனர். ஆர்சிபி அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், சிஎஸ்கே அணி தரப்பில் ஸ்பின்னர்களை கொஞ்சன் முன்னதாக அட்டாக்கில் கொண்டு வந்தனர்.

சிறப்பாக பவுலிங் செய்த மிட்சல் சான்ட்னர் 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும், தீக்சனா 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனை விடவும் சான்ட்னர் 10 டாட் பால்களையும், தீக்சனா 11 டாட் பால்களையும் வீசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிஎஸ்கே அணி தரப்பில் மொத்தமாக 38 டாட் பால்கள் வீசப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆர்சிபி அணியை 220 ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இல்லையென்றால் ஆர்சிபி அணி குறைந்தது 250 ரன்களை சேர்த்திருக்கும். 12 ஓவர்களுக்கு மேல் ஈரப்பதம் அதிகமானதால், வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதிகளவிலான டாஸ் பால்களை வீசத் தொடங்கினர். இதனால் ஆர்சிபி அணி அதிக ரன்களை விளாசியது. அதேபோல் சான்ட்னர் மற்றும் தீக்சனா இருவரையும் சிஎஸ்கே அணி மீண்டும் வாங்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுருத்தி வருகின்றனர்.

Story first published: Saturday, May 18, 2024, 22:42 [IST]
Other articles published on May 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+