Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப ஆடாதீங்க கோலி.. இன்னும் நீங்க கப் ஜெய்க்கல.. ஆத்துமீறிய விராட்.. சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இது சிஎஸ்கே அணி ரசிகர்களை மிகவும் வருத்தம் அடைய செய்திருக்கிறது. குறிப்பாக rcb அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவமும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிஎஸ்கே அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் ரன் ரேட் அடிப்படையில் ஆர் சி பி அணி முன்னேறி சென்று விட்டது.

IPL 2024 RCB vs csk - Fans blast virat kohli for his unruly behaviour

இந்தப் போட்டியில் ஆர் சி பி யின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிஎஸ்கே ரசிகர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டார். குறிப்பாக ஏதோ சிஎஸ்கே அணி ரசிகர்களை வெளிநாட்டு ரசிகர்கள் போல் பாவித்த விராட் கோலி தேவையில்லாமல் ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று சைகையில் காட்டினார்.

மேலும் சிஎஸ்கேவை தோற்கடித்த பிறகு ஏதோ ஐபிஎல் கோப்பையை ஐந்து முறை வென்று விட்டோம் என்பது போல் ஓவராக குதித்து சிஎஸ்கே ரசிகர்களின் வயிற்று எரிச்சலை பெற்றுக்கொண்டார். மேலும் நடுவர்களிடம் தேவையில்லாமல் வம்பு இழுத்து கெட்ட பெயரை விராட் கோலி பெற்றுக்கொண்டார். விராட் கோலியின் இந்த செயலுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணி ஐந்து முறை கோப்பையை வென்று வெற்றிகரமான ஒரு அணியாக இருப்பதாகவும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை ஏதோ கோப்பையை வென்று விட்டோம் என்பது போல் விராட் கோலி நடந்து கொண்டதாகவும் சிஎஸ்கே ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆர் சி பி அணி வீரர்களும் ரசிகர்களும் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும்போது அவர்கள் நிச்சயமாக கோப்பையை வெல்ல மாட்டார்கள் என்றும். எலிமினேட்டர் போட்டியிலே அவர்கள் தோல்வியை தழுவி வெளியேறி விடுவார்கள் என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விராட் கோலியின் இந்த செய்கையை பார்த்து மனம் வருத்தப்படுவதாகவும் இனி ஆர்சிபி அணிக்கு ஆதரவை அளிக்க மாட்டோம் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதைப் போன்று விராட் கோலி களத்தில் நடந்து கொண்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆர் சி பி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று விளையாடியது பாராட்டத்தக்க விஷயமாக இருந்தாலும் அந்த அணி ரசிகர்களும் வீரர்களும் தலைகனத்துடன் நடந்து கொள்வது அவர்களுக்கு நல்லது அல்ல என்றும் பொது தரப்பினர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Sunday, May 19, 2024, 6:59 [IST]
Other articles published on May 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+