Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தில் இருந்து குணமடைந்த தோனி.. வலைப் பயிற்சியில் நடந்த சம்பவம்.. இனி சிஎஸ்கேவை தடுக்க முடியாது!

பெங்களூர் : சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி காயத்தில் இருந்து குணமடைந்து வலைப் பயிற்சியில் பவுலிங் செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில், சென்னை அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2024 RCB vs CSK MS Dhoni was seen bowling in the net practice for the match against RCB at Bangalore

இந்த சீசனில் முன்னாள் அணியின் கேப்டன் தோனி 13 போட்டிகளில் விளையாடி 136 ரன்களை விளாசி இருக்கிறார். கடைசி ஓவர்களில் களமிறங்கும் தோனி, சிஎஸ்கே அணிக்கு தேவையான அதிரடியை வெளிப்படுத்தி வந்துள்ளார். கடந்த சீசனில் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், இந்த சீசனில் குறைந்த ஓவர்களே பேட்டிங் செய்து வருகிறார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் தரப்பில், தோனியால் 2 முதல் 3 ஓவர்கள் வரை மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். ஆனால் விக்கெட் கீப்பிங் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பேட்டிங் செய்யும் போதும் தோனி 2 ரன்களுக்கு மேல் ஓட முடியாமல் திணறி வந்தார்.

IPL 2024 RCB vs CSK MS Dhoni was seen bowling in the net practice for the match against RCB at Bangalore

அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் போது கூட தோனி காலில் ஐஸ் பேக் வைத்திருந்தார். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக பெங்களூரில் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிற்சியின் போது சிஎஸ்கே ஜாம்பவான் தோனி, பவுலிங் செய்து ஆச்சரியம் அளித்துள்ளார்.

ht

இதனால் காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தோனி சிறப்பாக மீண்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்த வீடியோவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர். பிளே ஆஃப் தொடர் நெருங்கியுள்ள சூழலில், தோனி முழு ஃபிட்னஸ்-க்கு திரும்பியிருப்பது சிஎஸ்கே அணிக்கும் சாதகமாக அமைந்துள்ளது.

Story first published: Thursday, May 16, 2024, 21:47 [IST]
Other articles published on May 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+