For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே தோற்றது இங்கே தான்.. தோனி அடித்த சிக்ஸால் ஆர்சிபிக்கு கிடைத்த சாதகம்.. ஓய்வறையில் சொன்ன டிகே

பெங்களூர் : தோனி அடித்த சிக்ஸ் 110 மீ தூரம் சென்று விழுந்ததே ஆர்சிபி அணி வெற்றிக்கு உதவியது என்று தினேஷ் கார்த்திக் ஓய்வறையில் பேசியுள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே தோனி சிக்சர் ஒன்றை விளாசினார். அந்த சிக்ஸ் சின்னசாமி மைதானத்திற்கு வெளியில் சென்று விழுந்தது. இதனை கணக்கிடும் போது, 110 மீ தூரம் சென்றது தெரிய வந்தது.

IPL 2024 RCB vs CSK MS Dhoni s 110 M six changed the game in favour of RCB says Dinesh Karthik in the Dressing room

இதனால் ஆர்சிபி அணி புதிய பந்தில் பவுலிங் செய்ய வேண்டிய நிலை உருவாகியது. பழைய பந்தில் கூடுதலாக ஈரம் இருந்ததால், பவுலர்களால் திட்டமிட்ட பகுதிகளில் பவுலிங் செய்ய முடியாமல் திணறினர். ஆனால் புதிய பந்து வழங்கப்பட்டதால், அந்த பந்தில் சரியாக க்ரிப் செய்ய முடிந்ததோடு, திட்டமிட்ட பகுதிகளிலும் பவுலிங் செய்ய முடிந்தது.

இந்த வெற்றி குறித்து ஆர்சிபி அணியின் ஓய்வறையில் தினேஷ் கார்த்திக் பேசுகையில், முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வியடைந்த போது, 9வது போட்டியில் களமிறங்கியதற்கு முன்பாகவே, இதுதான் என் கடைசி போட்டி என்று முடிவெடுத்தேன். விராட் கோலி, சக ஆர்சிபி வீரர்களிடம் குட் பை சொல்ல தொடங்கிவிட்டேன். ஆனால் காலம் வேறு மாதிரி அமைந்துள்ளது.

அடுத்தடுத்து சில வெற்றிகளை பெற்ற போது, இன்னும் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்ததாக நினைத்தேன். ஆனால் 6 போட்டியில் அனைத்திலும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சாதாரண பயணம் கிடையாது. தோல்வியின் போது உடனிருந்த ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த பயணம் இன்னும் முடியவில்லை.

ஆர்சிபி ரசிகர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும், "அந்த ஆர்சிபி அணி எப்படி தெரியுமா" என்று கதையாக சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். இந்த சீசனில் மிகச்சிறந்த ஃபீல்டிங் அணி என்றால் அது ஆர்சிபி தான். அதற்கு டூ பிளசிஸின் கேட்ச் ஒன்று தான் ஒரு சோறு பதம்.

அதேபோல் தோனியின் கேட்சை பிடித்த ஸ்வப்னில் சிங்கின் கேட்சும் சாதாரணமானது கிடையாது. என்னை பொறுத்தவரை ஆட்டம் மாறியது தோனி அடித்த 110 மீட்டர் தூர சிக்ஸால் தான். ஏனென்றால் மைதானத்திற்கு வெளியில் சிக்ஸ் சென்றதால், யாஷ் தயாள் வீசுவதற்கு புதிய பந்து கிடைத்தது. அந்த பழைய பந்து ஈரமாக இருந்ததால், திட்டமிட்ட பகுதியில் பவுலிங் செய்ய முடியவில்லை.

ஆனால் முதல் பந்திற்கு பின் யாஷ் தயாள் அசத்திவிட்டார். பயிற்சியாளர் ஆண்டி பிளவரை போல் அல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டாடுங்கள்.. அப்படியொரு வெற்றியையும், கம்பேக்கையும் ஆர்சிபி அணி செய்துள்ளது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நமக்கு ஒரு பணி காத்திருக்கிறது. அதனை வென்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, May 19, 2024, 11:03 [IST]
Other articles published on May 19, 2024
English summary
IPL 2024 RCB vs CSK : MS Dhoni's 110 M six changed the game in favour of RCB says Dinesh Karthik in the Dressing room
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+