Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!

பெங்களூர் : கொல்கத்தா அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான சுனில் நரைன் பவுலிங்கில் ஆர்சிபி அணியின் இளம் வீரர் கேமரூன் க்ரீன் மரண அடி அடித்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 10வது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது. ஏர்கனவே விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையே மோதல் இருப்பதால், இந்த போட்டி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் கேப்டன் நிதிஷ் ராணாவை நீக்கிவிட்டு, அனுகுல் ராயை அணிக்குள் கொண்டு வந்தது கேகேஆர் அணி.

IPL 2024 RCB vs KKR Cameron Green attacks KKR Star Spinner Sunil Narine to get the runs in the powerplay at chinnaswamy Stadium

இதன்பின் பெங்களூர் அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. கேகேஆர் அணி தரப்பில் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் முதல் ஓவரை வீச வந்தார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து விராட் கோலி வரவேற்க, தொடர்ந்து 2வது ஓவரை வீசிய ஹர்சித் ராணா பவுலிங்கில் சிக்ஸ் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார் டூ பிளசிஸ். இதன்பின் உடனடியாக இளம் வீரர் கேமரூன் க்ரீன் களமிறங்கினார்.

தொடர்ந்து ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் சிக்ஸ், பவுண்டரி அடிக்க, க்ரீன் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரியை விளாசி அட்டாக்கை தொடங்கினார். அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் கட்டாயம் ஒரு பவுண்டரி சென்ற நிலையில், இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க கேகேஆர் அணி ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தது. குறிப்பாக பவர் பிளேவின் கடைசி ஓவரில் சுனில் நரைன் அட்டாக்கில் வந்தார்.

கேகேஆர் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வரும் சுனில் நரைனை அட்டாக் செய்வது எளிதல்ல. இதனை உணர்ந்து முதல் பந்திலேயே விராட் கோலி ஒரு ரன்னை எடுத்து மறுமுனைக்கு சென்றார். அதன்பின் கேமரூன் க்ரீனுக்கு வீசப்பட்ட அடுத்த 2 பந்துகளும் டாட் பால்களாகியது. இதனால் களத்தில் என்னமோ நடக்க போவதை உணர்ந்து ரசிகர்களும் பரபரப்பாகினர். இந்த நிலையில் 4வது பந்தில் கேமரூன் க்ரீன் அசத்தலாக ஒரு பவுண்டரி அடிக்க, 5வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரியை விளாசப்பட்டது.

இதனால் தனது லைனை சுனில் நரைன் மாற்ற, கேமரூன் க்ரீன் லாங் ஆன் திசையில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி அசத்தினார். இதன் மூலமாக நட்சத்திர பவுலரான சுனில் நரைன் ஓவரிலேயே 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை குவித்து விளையாடி வருகிறது.

Story first published: Friday, March 29, 2024, 20:16 [IST]
Other articles published on Mar 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+