Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன்யா இப்படி ஆடுற.. நொந்து போன ஆர்சிபி.. கோலி டீமை பார்த்தாலே வெறியாகும் கொல்கத்தா வீரர்

பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தன் அதிரடி பேட்டிங்கால் சிதற விட்டார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அல் - ரவுண்டர் சுனில் நரைன்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது.

IPL 2024 RCB vs KKR Sunil Narine always score runs against RCB

கொல்கத்தா அணியின் துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் 22 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அவர் ஆடிய ஆட்டத்தால் கொல்கத்தா அணி பவர் பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் 85 ரன்கள் குவித்தது. மற்றொரு துவக்க வீரர் பில் சால்ட் 20 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

பின்னர் வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 39 ரன்களும் சேர்த்தனர். 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. மற்ற பேட்ஸ்மேன்களை விட சுனில் நரைன் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார். அதுவே இந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

மற்ற ஐபிஎல் அணிகளுக்கு எதிராக ஆடும் போதெல்லாம் சுமாராக ஆடும் சுனில் நரைன், பெங்களூரு அணியைக் கண்டால் மட்டும் ரன் குவித்து அந்த அணியின் தோல்விக்கு காரணமாக இருந்து வருகிறார். கடந்த 2015 முதல் இப்போது வரை பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்து வீழ்த்தி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த காலகட்டத்தில் கொல்கத்தா அணி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. அதற்கு சுனில் நரைனின் இந்த பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம்.

சுனில் நரைன் பெங்களூரு அணிக்கு எதிராக 11 இன்னிங்ஸ்களில் 279 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 31 ஆகும். இதில் சராசரியை விட ஸ்ட்ரைக் ரேட் தான் முக்கியமானது. அவர் 195 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை குவித்துள்ளார். அதே சமயம் மற்ற அணிகளுக்கு எதிராக 87 இன்னிங்ஸ்களில் 816 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 11 மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட் 151. இதில் இருந்தே பெங்களூரு அணியைக் கண்டால் மட்டும் சுனில் நரைன் விஸ்வரூபம் எடுத்து பேட்டிங்கில் ரன் குவிப்பது தெளிவாக தெரிகிறது.

Story first published: Saturday, March 30, 2024, 0:05 [IST]
Other articles published on Mar 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+