பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் போடும் போது கே எல் ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக வந்தார்.
இதற்கு முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆடிய போது கே எல் ராகுல் இம்பாக்ட் வீரராக இருந்தார். கேப்டன் பொறுப்பை நிக்கோலஸ் பூரன் ஏற்று அணியை வழிநடத்தி இருந்தார். லக்னோ அணியும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்ததாலும், கே எல் ராகுலுக்கு காலில் வலி இருப்பதாலும் இனி நிக்கோலஸ் பூரன் தான் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுவார் என அப்போது தகவல் பரவியது. ஆனால், அடுத்து நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுல் மீண்டும் அணியின் கேப்டனாக வந்தார்.
இந்த மாற்றம் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கேப்டன் என்பது சரியான முடிவு தானா? அணியில் இருக்கும் வீரர்களுக்கே இது குழப்பத்தை ஏற்படுத்தாதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லக்னோ அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பிளேயிங் 11 : குயின்டன் டி காக் விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ்
லக்னோ இம்பாக்ட் வீரர்கள் : மணிமாறன் சித்தார்த், ஷமர் ஜோசப், தீபக் ஹூடா, அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்பா கௌதம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11 : விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), மயங்க் டாகர், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ், யாஷ் தயாள்
பெங்களூரூ இம்பாக்ட் வீரர்கள் : சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, விஜய்குமார் வைஷாக், ஸ்வப்னில் சிங்