Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா நீ? 106 மீட்டர்.. மைதானத்தை விட்டே பறந்த பந்து.. ஹாட்ரிக் சிக்ஸரை பார்த்து மிரண்ட ஆர்சிபி

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் தனது அதிரடி ஆட்டத்தால் கடைசி மூன்று ஓவர்களில் ஐந்து சிக்ஸ் அடித்து ரன் குவித்தார்.

இதில் ஹாட்ரிக் சிக்ஸ்-உம் அடங்கும். அதில் அவர் அடித்த ஒரு சிக்ஸ் 106 மீட்டர் தூரம் வரை சென்றது. 2024 ஐபிஎல் தொடரில் இதுவே மிக அதிக தூரம் அடிக்கப்பட்ட சிக்ஸ் ஆகும்.

IPL 2024 RCB vs LSG Nicholas Pooran hit longest six of IPL 2024

இந்தப் போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் டி காக் 56 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். கடைசி ஓவர்களில் நிக்கோலஸ் பூரன் தனது அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினார். 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார் பூரன்.

19வது ஓவரில் தான் அவர் தனது அதிரடி ஆட்டத்தை காட்டினார். அந்த ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார். அதில் அவர் அடித்த மூன்றாவது சிக்ஸ் 106 மீட்டர் தூரம் வரை சென்றது. மேலும், மைதானத்தின் மேற்கூரையை தாண்டி சென்றது பந்து. அதன் பின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்தார் நிக்கோலஸ் பூரன்.

அவர் ஆடிய அதிரடி ஆட்டத்தை கண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் மிரண்டனர். அதுவரை கட்டுக்கோப்பாக இருந்த ஸ்கோர் கடைசி 2 ஓவர்களில் உயர்ந்தது. 20 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்களுக்கு 181 ரன்கள் குவித்தது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இதுவரை 180க்கும் மேற்பட்ட ஸ்கோரை பெங்களூரு அணி சேஸிங் செய்ததே இல்லை என்பதால் அந்த அணிக்கு நிக்கோலஸ் பூரன் ஆட்டம் பெரும் பின்னடைவாக அமைந்தது. 182 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய பெங்களூரு அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, April 2, 2024, 22:50 [IST]
Other articles published on Apr 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+