Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மைதானத்தில் கத்துவது மூலம் கோப்பையை வெல்ல முடியாது.. விராட் கோலியை கிழித்து தொங்கவிட்ட ராயுடு

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி வழக்கம் போல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டு பிளே ஆப் சுற்றிலே வெளியேறியது. லீக் சுற்றில் ஆர்சிபி அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப்க்கு சென்றது.

குறிப்பாக பெங்களூரில் நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும் ஆர்சிபி அணியும் பலப் பரிட்சை நடத்தியது. இதில் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி வெற்றி பிளே ஆப்க்கு சென்றது. அப்போது ஆர்சிபி ரசிகர்கள் ஏதோ ஐபிஎல் கோப்பையை வென்றது போல் மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடி சிஎஸ்கே ரசிகர்களை வெறுப்பேற்றினர்.

IPL 2024 RCB vs RR - Ambatti rayudu trolls indirectly virat kohli after getting knocked out

மேலும் ஆர் சி பி அணியின் ஸ்டார் வீரரான விராட் கோலி சிஎஸ்கே ரசிகர்களை பார்த்து வாயை மூடுங்கள் என்று சைகை செய்தார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மனதை உடைத்தது. அது மட்டுமல்லாமல் தோனிக்கு கை கொடுக்காமல் ஆர்சி பி வீரர்கள் கொண்டாடினர். மேலும் சிஎஸ்கே வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது ஆர்சிபி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வெறுப்பேற்றினர்.

இந்த நிலையில் rcb அணி தற்போது எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, விராட் கோலி மைதானத்தில் தேவையில்லாமல் கத்துவது குறித்து சாடி இருக்கிறார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தளத்தில் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் சும்மா கத்துவதன் மூலமும் கொண்டாடுவதன் மூலமும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாது.

ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் முதலில் நீங்கள் பிளே ஆஃப் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முக்கியமான போட்டிகளை வெற்றி பெறும் பழக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அம்பத்தி ராயுடு சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கிறார். ராயுடுவின் இந்த பதிலை சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஆர் சி பி கொண்டாட்டத்தை கிண்டல் செய்த ராயுடு சிஎஸ்கே வேண்டுமானால் ஒரு கோப்பையை வாங்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வாருங்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 23, 2024, 6:57 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+