Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்க ஊரையா கிண்டல் பண்றீங்க? மொத்தமாக ஆர்சிபியை சிதைத்த அஸ்வின்.. வெல்லுமா ராஜஸ்தான்?

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் பிளே ஆஃப் சுற்றி எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்களை பெற்று இலக்காக ஆர் சி பி அணி நிர்ணயித்தது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை சஞ்சு சாம்சன் தேர்வு செய்தார். இதன் அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் டுபிளசிஸ், விராட் கோலி ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் டிப்ளசிஸ் 17 ரன்களில் ஆட்டம் இழக்க அபாரமாக விளையாடிய விராட் கோலி 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று கேமரன் கிரீன் 27 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில் ரஜத் பட்டிதார் மட்டும் அதிரடியாக ஆடி ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும் அவரும் முக்கிய கட்டத்தில் 22 பந்துகளில் 34 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

IPL 2024 RCB vs RR - Ashwin Paybacks in bowling as RCB Restricted in to 172 runs

இறுதியில் மஹிப்பால் 17 பந்துகளில் 32 ரன்களும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களும் இம்பாக்ட் வீரராக களமிறங்க ஸ்வாப்னில் சிங் 9 ரப்களும் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் அபாரமாக செயல்பட்டார்.

அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னும் சொல்லப்போனால் ஆர் சி பி அணி இந்த ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும். ஆனால் அஸ்வின் தான் ஆர் சி பி அணியின் பேட்டிங்கிற்கு முட்டுக்கட்டையாக இருந்தார்.

ஏற்கனவே சிஎஸ்கே அணி ரசிகர்களையும் சிஎஸ்கே அணியையும் ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக அத்துமீறி வெறுப்பேற்றினர். அதற்கு அஸ்வின் பதிலடி கொடுப்பார் என்று நாம் ஏற்கனவே காணித்திருந்தோம். அதற்கு ஏற்றார் போல் இன்று அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் .போட்டிக்கு பிறகு பேசிய அஸ்வின் ,இந்த மைதானத்திற்கு இது கொஞ்சம் குறைவான இலக்கு தான் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Story first published: Wednesday, May 22, 2024, 21:38 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+