Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிரிச்சு வயிறு வலிக்குது! கோலி அவுட்டான உடன் வச்சு செய்யும் சிஎஸ்கே ரசிகர்கள்.. ஆர்சிபி பேன்ஸ் பாவம்

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் தொடங்குவதற்கு முன்பு ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்சிபி இம்முறை கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தார்கள். காரணம் விராட் கோலி 16 ஆண்டுகளாக கடுமையாக போராடியும் ஆர் சி பி அணியால் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போல், விராட் கோலியும் இந்த மைல் கல்லை எட்ட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யானை எப்படி தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளுமோ அதேபோல் விராட் கோலி செய்த அடாவடித்தனத்தால் தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆர் சி பி அணியின் எதிரிகளாக மாறிவிட்டார்கள்.

IPL 2024 RCB vs RR Eliminator - CSK Fans trolling virat kohli as chokli with WWE Memes

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அத்துமீறி நடந்து கொண்டது மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது தான் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் rcb அடுத்து விளையாடும் போட்டிக்காக காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்கள், தற்போது விராட் கோலி ஆட்டம் இழந்தவுடன் அவரை வச்சி செய்து வருகிறார்கள்.

குறிப்பாக விராட் கோலியை ரசிகர்கள் சோக்கிலி என்று கூறுவது உண்டு. அதாவது முக்கியமான ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், விராட் கோலி ஆட்டம் இழப்பது இது முதல் முறை அல்ல. ஐபிஎல் தொடரில் இதுவரை விராட் கோலி அதிக ரன்கள் அடித்தாலும், முக்கியமான கட்டத்தில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

2009 ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் விராட் கோலி 7 ரன்கள் 2010 ஐபிஎல் அரையிறுதி ஆட்டத்தில் ஒன்பது ரன்களும், 2011 குவாலிபயர் 2வில் 8 ரன்களும், 2011 இறுதிப்போட்டியில் 35 ரன்களும், 2015 குவாலிபயர் 2வில் 12 ரன்களும், 2016 குவாலிபயர் ஒன்றில் டக் அவுட்டும், 2020 எலிமினேட்டரில் 6 ரன்களும், 2022 குவாலிபயர் 2வில் 7 ரன்களும்,2024 எலிமினேட்டரில் 33 ரன்களும் விராட் கோலி அடித்திருப்பதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

பிரபல WWEவில் வரும் ராயல் ரம்பிள் போட்டியில் ஒரு வீரர் ரெஸ்லிங் களத்திற்கு ஏறிய உடனே வெளியேற்றப்படுவார். அதை விராட் கோலி உடன் ஒப்பிட்டு சிஎஸ்கே ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதேபோன்று விராட் கோலி சிஎஸ்கே போட்டியில் கத்தியதாகவும் தற்போது ஏன் அவ்வாறு கற்றவில்லை என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, May 22, 2024, 22:49 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+