For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே மேல கைவச்சிருக்க கூடாது.. ஸ்பைடர் எஸ்ஜே சூர்யாவாக மாறிட்டாங்க.. ஆர்சிபியை பொளக்கும் மீம்ஸ்!

அகமதாபாத் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததை கொண்டாடும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம் திருவிழாவை போல் ஏராளமான மீம்ஸை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இங்கிலிஷ்காரன் படத்தில் வாக்கி டாக்கியை கொடுத்த வடிவேலுவிடம், "என்ன பாஸ் இதிலிருந்து எங்க அக்காவுக்கு ட்ரை பன்றேன்.. லைன் கிடைக்கவே மாட்டிகிது" என்று கூறுவார். அதற்கு வடிவேலு மிரண்டு போவார். இதில் ஆர்சிபி அணி 17வது முறையாக கோப்பை கனவை பறிகொடுத்துள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில் அப்படியே வடிவேலுவாக ஆர்சிபி அணியை மாற்றி, "இன்னும் ஒரு சீசன் தோற்றால் போதும்.. எதுக்கு.. தோக்குறதுல குருசாமி ஆகிருவீங்கடா சாலாஸ்" என்று சொல்வதாகவும், அதற்கு வடிவேலு மிரள்வதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் மொமெண்ட்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator

"தேவர் மகன்" படத்தில் கமல்ஹாசன், இவங்க வரதுக்குள்ள நான் செத்துருவேன் போலயே ஐயா".. என்பார்.. அதற்கு சிவாஜி கணேசன், "போ.. செத்துப் போ.. ஆனால் இவன்லாம் மெல்லமா தான் வருவான்" என்று ஒரு வசனம் சொல்லுவார். இதனை அப்படியே கமல்ஹாசனை ஆர்சிபி ரசிகராக மாற்றி, 3 நாட்கள் எல்லாம் நாங்கள் அழுக மாட்டோம் என்று சொல்வது போலவும், அதற்கு சிஎஸ்கே ரசிகர்கள், "வெக்கம்.. மானம்.. சூடு.. சொரணை இருக்கவன் அழுவான்" என்று பதிலடி கொடுப்பது போலவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் தரமான சம்பவம்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator

"பம்மல் கே சம்மந்தம்" படத்தில் சிவன் வேடம் போட்டு கொண்டு கமல்ஹாசன் வாயில் பப்புள் விடுவார். அதனை பார்த்த இயக்குநர் கஜேந்திரன், "ஐயோ.. சம்மந்தம்.. சிவன் பப்புள் எல்லாம் விட மாட்டாரு சம்மந்தம்" என்பார். இதனை அப்படியே மாற்றி, "ஐயோ.. ஆர்சிபி.. சிஎஸ்கே அணியை எலிமினேட் பண்ணதுக்கு எல்லாம் யாரும் கப் தர மாட்டாங்க சம்மந்தம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் நெட்டியடி மொமண்ட்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator

"ரமணா" படத்தில் விஜயகாந்தை பற்றி சொல்லும் பக்கத்து வீட்டின் மூத்த கிழவி, "அந்த சிங்கு பையன் இருக்கானா.. அவன்லாம் வந்த புதிதில் ராத்திரியெல்லாம் அம்மா.. அம்மானு அழுவான்.. வாத்தியார் தான் தோள் மேல போட்டுகிட்டு தூங்க வைப்பாரு" என்பார். அதனை அப்படியே மாற்றி, "ராத்திரியெல்லாம் ஓ..ன்னு ஒரே அழுகை.. அப்புறம், மந்தனா அக்கா கப்பை காட்டி தான் தூங்க வச்சோம்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி மொமண்ட்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator

சர்வதேச அளவில் இறந்தவரை தூக்கி செல்ல வரும் நான்கு பேரின் மீம் டெம்பளேட் மிகவும் பிரபலமானது. அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு 4 ரசிகர்கள் அகமதாபாத் மைதானத்தில் இருந்தனர். ஒவ்வொரு முறை ஆர்சிபி விக்கெட் வீழ்ந்த போதும், கேமரா அவர்கள் பக்கமே திரும்பியது. இதனை அப்படியே மாற்றி, 4 சிஎஸ்கே ரசிகர்களையும் இறந்தவரை தூக்கி செல்லும் டெம்ப்ளேட்டாக மாற்றி, ஆர்சிபி அணியை பாடையில் ஏற்றியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண கலாய் மொமண்ட்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator

கில்லி படத்தில் விஜய், "மவனே.. கபடி ஆடலாம்.. கிரிக்கெட் ஆடலாம்.. ஏன் கதகளி கூட ஆடலாம்.. ஆனால் ஆணவத்துல மட்டும் ஆடக் கூடாது மச்சி" என்பார். அதனை அப்படியே மாற்றி சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபியன்ஸை பார்த்து, "மவனே.. கபடி ஆடலாம்.. கிரிக்கெட் ஆடலாம்.. பரத நாட்டியம் கூட ஆடலாம்.. ஆனால் ஆணவத்துல மட்டும் ஆட கூடாது மச்சி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள தரமான அட்வைஸ்.

IPL 2024 RCB vs RR Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator
Story first published: Thursday, May 23, 2024, 10:19 [IST]
Other articles published on May 23, 2024
English summary
IPL 2024 RCB vs RR : Fantastic memes from csk fans after rcb loss by 4 wickets against RR in Eliminator
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+