Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க 5 முறை சாம்பியன்.. ஜாலியாக நினைவூட்டிய ராயுடு.. ஆர்சிபி மீது வன்மத்தை இறக்கும் சிஎஸ்கே!

சென்னை : ஐபிஎல் தொடரில் நாங்கள் 5 முறை சாம்பியன் என்று சிஎஸ்கே அணியின் அம்பாதி ராயுடு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைந்ததன் காரணமாக, 17வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆர்சிபி அணி இழந்துள்ளது. இதனால் ஆர்சிபி அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

IPL 2024 RCB vs RR Just a kind reminder is required from the 5 time champions says CSK Player Ambati Rayudu

இந்த சூழலில் ஆர்சிபி அணியை சிஎஸ்கே அணியின் வீரர்களும், ரசிகர்களும் இணைந்து கிண்டல் செய்து வருகின்றனர். ஏனென்றால் சிஎஸ்கே அணியை வீழ்த்திவிட்டு ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியை வீழ்த்தியதை ஆர்சிபி அணி வீரர்களும், ரசிகர்களும் தீவிரமாக கொண்டாடினர்.

அதேபோல் மைதானத்திற்கு வெளியிலும் சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபி ரசிகர்கள் அச்சுறுத்த தொடங்கினர். அப்போதே சிஎஸ்கே ஜாம்பவான் அம்பாதி ராயுடு, ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டு ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடலாம் என்று நக்கல் செய்தார். தற்போது ஆர்சிபி அணி தோல்வியடைந்த நிலையில், மைதானத்தில் கத்துவதாலோ, சிஎஸ்கே அணியை வீழ்த்தியதாலோ கோப்பையை பெற முடியாது.

IPL 2024 RCB vs RR Just a kind reminder is required from the 5 time champions says CSK Player Ambati Rayudu

ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென்றால், பிளே ஆஃப் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். முக்கியப் போட்டிகளில் வென்றால் தான் கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவித்திருந்தார். இது ஆர்சிபி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்சிபி அணி ரசிகர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் வகையில் அம்பாதி ராயுடு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், 5 முறை கோப்பையை வென்ற சூழலில், சிஎஸ்கே அணியின் ஜடேஜா, அம்பாதி ராயுடு இருவரும் 5 விரல்களையும் காட்டிய புகைப்படத்தை பதிவிட்டதோடு, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியிடம் இருந்து ஒரு அன்பான நினைவூட்டல்.. சில நேரங்களில் மென்மையாக நினைவூட்டவது அவசியம் தான் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஆர்சிபி ரசிகர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, May 23, 2024, 15:20 [IST]
Other articles published on May 23, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+