Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு கட்டம் கட்டிய சஞ்சு சாம்சன்.. தோனி ஸ்டைலில் கொடுக்கப்பட்ட பிரஷர்.. உடனே அவுட்டான காமெடி

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி ஆரஞ்சு கோப்பையை கைப்பற்றினார். ஆர்சிபி அணியின் வெற்றிக்கு விராட் கோலியின் பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்தது. கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக விராட் கோலி தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார். சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் கூட விராட் கோலி நல்ல தொடக்கத்தை ஆர் சி பி அணிக்கு அளித்தார்.

IPL 2024 RCB vs RR - Sanju samson brilliant move puts Huge Pressure on virat kohli

இந்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை rcb எதிர்கொண்டது. இந்த போட்டியில் விராட் கோலியின் டுபிளசிஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தால் தான் ஆர்சிபி அணி பெரிய இலக்கை எட்டும். இதனால் இவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்தது. இந்த நிலை அபாரமாக பந்து வீசிய டுபிளசிஸ் விக்கெட்டை வீழ்த்தினாலும் விராட் கோலி தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார்.

விராட் கோலி தற்போது இறங்கி வந்து ஷாட் அடித்து ரன்களை சேர்க்கிறார். இதனை கவனித்த சஞ்சு சாம்சன் உடனடியாக தோனி ஸ்டைலை பின்பற்றினார். பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் இறங்கி வந்து அடித்தால், தோனி ஸ்டெம்புக்கு அருகே வந்து நின்று கொண்டு பிரஷர் கொடுப்பார். அதைப்போலவே விராட் கோலி இறங்கி வந்து அடிக்க சாம்சன் ஸ்டெம்புக்கு அருகே வந்து கோலிக்கு பிரஷர் கொடுத்தார்.

இதனால் கோலி இறங்கி வந்து அடிக்காமல் களத்தில் நின்று விளையாடினார். ஒரு கட்டத்தில் கோலியால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.இந்த சூழலில் சாஹல் வீசிய பந்தை நின்ற இடத்தில் அடிக்க இயன்ற போது சிக்ஸ் லைனில் கேட்ச் ஆனது. இதனால் விராட் கோலி 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலியின் முடிவுக்கு சஞ்சு சாம்சன் செய்த புத்திசாலித்தனம் தான் காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.

Story first published: Wednesday, May 22, 2024, 21:06 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+