Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளிப்படையாவே தப்பு செய்வீங்களா? மூன்றாம் நடுவரை வறுத்து எடுத்த கவாஸ்கர்..ஆர்சிபிக்கு சாதகமாக முடிவு

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் நடுவர்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் ரசிகர்களால் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூர் அணிக்கு இடையிலான போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

ஆட்டத்தின் 15வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் ஆவேஸ் கான் பந்து வீசினார். அப்போது ரஜத் பட்டிதார் விக்கெட்டை எடுத்த நிலையில்,அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் களத்திற்கு வந்தார்.

IPL 2024 RCB vs RR - Sunil Gavaskar slams Third umpire for giving not out to dinesh karthik

அப்போது அடுத்த பந்திலே தினேஷ் கார்த்திக் எல்பி டபிள்யு ஆனார். இதற்கு கள நடுவர் அவுட் கொடுத்தார். எனினும் தினேஷ் கார்த்திக் மூன்றாம் நடுவரின் உதவியை நாடலாமா வேண்டாமா என சந்தேகத்துடன் டி ஆர் எஸ் கேட்டார். அப்போது பந்து பேட்டில் (bat) படவில்லை என தெரிந்தது. ஆனால் பேட் கால் பேடில் (Pad) பட்டதை மூன்றாம் நடுவர் பந்து தான் பேட்டில் பட்டது என்று தவறாக நினைத்து நாட் அவுட் வழங்கினார். இதற்கு கவாஸ்கர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மூன்றாம் நடுவர் அவசரம் அவசரமாக ஏன் இந்த முடிவை எடுத்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பந்து பேடில் படுவதற்கு முன்பே ஸ்னிக்கரில் பேட் பேடில் பட்டது தெரிய வந்தது.ஆனால் மூன்றாம் நடுவர் இதை கவனிக்காமல் முடிவெடுத்து இருக்கிறார். இது கொஞ்சம் கூட சரியானது கிடையாது.

தினேஷ் கார்த்திக்கிற்கு பேட்டில் தான் பந்து பட்டிருந்தது என்று தெரிந்தால் அவர் உடனடியாகவே டிஆர்எஸ் முடிவை கேட்டிருப்பார். ஆனால் பந்து பேட்டில் படாமல் தான் சென்றது. இதனால் இது அவுட் தான் மூன்றாம் நடுவரின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கின்றது. இப்படி ஒரு முடிவை முக்கியமான ஆட்டத்தில் அறிவித்தால் அது போட்டியின் முடிவையே மாற்றிவிடும் என தெரியாதா?

இது கொஞ்சம் கூட சரி கிடையாது என்று கவாஸ்கர் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்த கெவின் பீட்டர்சன்னும், மூன்றாம் நடுவரின் இந்த முடிவு சங்கக்காரவை கடுப்படையை செய்திருப்பதாக குறிப்பிட்டார். தினேஷ் கார்த்திக்கு கிடைத்த மறுவாழ்வு என்றும் இந்த விஷயத்தில் மூன்றாம் நடுவர் தவறு செய்தது வெளிப்படையாக தெரிந்து விட்டதாகவும் அவர் சாடினார். ஆனால் தினேஷ் கார்த்திக் அப்போது ஜீரோ ரன்னில் இருந்த நிலையில் கூடுதலாக 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 22, 2024, 21:28 [IST]
Other articles published on May 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+