அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஆர் சி பி அணி பில்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவது அந்த அணி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. லீக் சுற்று முடிவில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்றது போல் ஆர் சி பி ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சூழலில் பிளே ஆப் சுற்றில் ஆர் சி பி அணி எப்போதும் தடுமாறுவது வழக்கமாகும். ஆர் சி பி அணி எப்போதும் முக்கிய கட்டத்தில் ஏதேனும் தவறுகளை செய்து சிக்கிக் கொள்வார்கள்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர் சி பி முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான அணி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 45 ரன்கள் சேர்த்தார்.
முதலில் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருடைய விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டுமென ஆர்சிபி ரசிகர்கள் முயற்சித்தனர். இந்த சூழலில் ரன் அவுட் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கரன் சர்மா வீசிய பந்தை சஞ்சு சாம்சன் அடித்தார். அதனை பிடித்த விராட் கோலி விரைவாக பவுலரிடம் கொடுத்தார்.ஆனால் கரன் சர்மா அந்த பந்தை பிடித்து ரன் அவுட் செய்யாமல் அப்படியே நின்று விட்டார்.
கரன்சர்மா ஸ்டம்பில் அடித்திருந்தால், அது நிச்சயம் ரன் அவுட் ஆகி இருக்கும். ஏனென்றால் சஞ்சு சாம்சன் பந்தை வந்ததையே பார்க்காமல் மெதுவாக நடந்து சென்று தான் கிரீசுக்கு போனார். இதை கண்ட விராட் கோலி கடுப்பானார். தன் தலையில் கையை வைத்து ரன் அவுட் செய்து இருக்கலாமே என்று சோகத்தில் இருந்தார்.
விராட் கோலியின் மைண்ட் வாய்ஸ் பார்க்கும்போது அடே ஆபரசிட்டிங்களா இதை ரன் அவுட் செய்து இருக்கலாமே என்று விராட் கோலி செய்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதேபோன்று மேக்ஸ்வெல் ஒரு கைக்கு வந்த கேட்சை தவறவிட்டார். அதேபோன்று ஆர்சிபி வீரர் ஒரு பவுண்டரியை தடுப்பதாக கூறி பந்தை பவுண்டரி லைனுக்கு விட்டுவிட்டார்.இப்படி சின்ன சின்ன தவறுகளை ஆர் சி பி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.