For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னை ஏமாத்திட்டாங்க கம்மின்ஸ்.. டாஸ் போடுற மாதிரி என்ன பண்ணாங்க தெரியுமா? டூ பிளசிஸ் விளக்கம்!

பெங்களூர் : மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸிலேயே நிர்வாகிகள் தன்னை ஏமாற்றியதாக ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸிடம் செய்து காட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 30வது போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக ஆர்சிபி அணி வான்கடே மைதானத்தில் மும்பை அணிக்கு எதிராக விளையாடி மோசமான தோல்வியை பெற்றது. ஆர்சிபி அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை மும்பை அணி 15.3 ஓவர்கள் சேஸ் செய்தது.

IPL 2024 RCB vs SRH Match Faf Du Plessis was describing to Pat Cummins how in MI vs RCB Match refree changed the coin during the toss

இதனிடையே இந்த போட்டியில் நடுவர்கள் மும்பை அணிக்கு சாதகமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸை டாஸிலேயே நிர்வாகிகள் ஏமாற்றி மும்பைக்கு சாதகமாக செயல்பட்டதும் தெரிய வந்தது. இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகியது.

இந்த நிலையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் வந்தார். அப்போது கம்மின்ஸ் அருகில் நின்றிருந்த டூ பிளசிஸ், கடந்த போட்டியில் என்ன நடந்தது தெரியுமா.. டாஸ் போடுவதற்காக நாணயத்தை சுண்டிவிட்டார்கள்.. அன்று விழுந்த பின் எடுத்த போது, அப்படியே திருப்பிவிட்டு என்னிடம் தோற்றுவிட்டதாக காட்டினார்கள் என்று செய்து காட்டி விளக்கம் கொடுத்தார்.

இதனையறிந்து கொண்டு கம்மின்ஸ், மிரண்டு போனார். டூ பிளசிஸ் - கம்மின்ஸ் உரையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் வரும் நாட்களிலாவது மும்பை இந்தியன்ஸ் அணி யாரையும் ஏமாற்றாமல் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் டாஸில் தவறு நடக்காமல் இருக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.

Story first published: Monday, April 15, 2024, 20:30 [IST]
Other articles published on Apr 15, 2024
English summary
IPL 2024 RCB vs SRH Match : Faf Du Plessis was describing to Pat Cummins how in MI vs RCB Match refree changed the coin during the toss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+