For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs SRH : மனசாட்சி இல்லையா உனக்கு.. சிக்சர் மழை பார்த்திருக்கீங்களா.. ஆர்சிபியை கதறவிட்ட ஐதராபாத்

பெங்களூரு : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 288 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஆர்சிபி அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கியது. ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை வீச வில் ஜாக்ஸ் வீசினார். அந்த ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, 2வது ஓவரை வீச டாப்லீ வந்தார்.

IPL 2024 RCB vs SRH Match Sunrisers Hyderabad Scored a 287 runs against RCB with a help of Travis Head and Klassen

இந்த ஓவரிலேயே 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் சேர்க்கப்பட, தொடர்ந்து ஃபெர்குசன் வீசிய 5வது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்களை விளாசினார். இதனால் 5 ஓவர்களிலேயே ஐதராபாத் அணியின் ஸ்கோர் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து யாஷ் தயாள் வீசிய 6வது ஓவரில் 20 ரன்கள் சேர்க்கப்பட, 7வது ஓவரில் 21 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் 7.1 ஓவரில் ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது.

இந்த நிலையில் டாப்லீ பவுலிங்கில் அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக அதிரடி வீரர் கிளாசன் களமிறக்கப்பட்டார். இதன்பின் இருவரும் இணைந்து ஆர்சிபி பவுலிங்கை பொளந்து கட்டினர். தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசிய ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதத்தை எட்டினார். அதேபோல் 12 ஓவர்களில் ஐதராபாத் அணி 150 ரன்களை கடந்தது. பின்னர் ஃபெர்குசன் பவுலிங்கில் ட்ராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 ஃபோர்ஸ் உட்பட 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையடுத்து ஆட்டத்தின் கட்டுப்பாட்டை கிளாசன் எடுத்து கொண்டார். இதனிடையே திடீரென கிளாசனை அட்டாக் செய்ய லோம்ரோரை கொண்டு வந்தார். அந்த ஓவரில் கிளாசன் 2 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட, தொடர்ந்து 15 ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 15 ஓவர்களிலேயே 200 ரன்களை ஐதராபாத் அணி எட்டியது. சிறப்பாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்பின் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு மாற்றிய கிளாசன், ஃபெர்குசன் பவுலிங்கில் 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த சமாத் - மார்க்ரம் உடன் இணைந்து பொளந்து கட்டினார். டாப்லீ வீசிய 19வது ஓவரில் அப்துல் சமாத் 3 பவுண்டரி, 2 சிக்ஸ் உட்பட 25 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் விளாசப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணி சேர்த்திருந்த 277 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை மீண்டும் ஐதராபாத் அணியே முறியடித்துள்ளது.

Story first published: Monday, April 15, 2024, 21:23 [IST]
Other articles published on Apr 15, 2024
English summary
IPL 2024 RCB vs SRH Match : Sunrisers Hyderabad Scored a 287 runs against RCB with a help of Travis Head and Klassen
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+