Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL : அதெல்லாம் கொடுக்க முடியாது கிளம்புங்க.. பாண்டியா கேட்ட விஷயம்.. கடுப்பான குஜராத் டைட்டன்ஸ்

மும்பை : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவி இருக்கிறார். இதன் பின்னணியில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிடம் அதிக சம்பளம் மற்றும் வருவாயில் பங்கு கேட்டதாகவும், அதை அவர்கள் கொடுக்க மறுத்ததால் அவர் மும்பை அணிக்கு தாவியதாகவும் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியால் 2022 ஐபிஎல் தொடரில் வாங்கப்பட்டார். அவருக்கு 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. கேப்டனாக 2022 ஐபிஎல் கோப்பையை அந்த அணிக்கு வென்று கொடுத்தார் பாண்டியா. 2023இல் குஜராத் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது.

மிகவும் சிறந்த கேப்டனாக தன்னை வெளிப்படுத்தினார் ஹர்திக் பாண்டியா ஆனால், 2023 ஐபிஎல் தொடர் முடிந்தது முதல் அவருக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே சில மனக் கசப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும், அத்துடன் அணியின் விளம்பர வருவாயில் குறிப்பிட்ட பங்கை தனக்கு தர வேண்டும் என அவர் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

IPL 2024 : Reasons behind Hardik Pandya transfer from Gujarat Titans to Mumbai Indians

ஹர்திக் பாண்டியா கேட்ட விஷயங்களை செய்ய குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் அவர் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக, தன்னை அடையாளம் கண்டு வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவ முடிவு செய்து அவர்களிடம் பாண்டியா பேசியதாக கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரர் அணிக்கு திரும்பினால் அவரை வருங்கலத்தில் கேப்டனாக நியமிக்கலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி கணக்கு போட்டு அவரை வாங்க முடிவு செய்து இருக்கிறது. அதற்காக அவரது மதிப்பான 15 கோடியை குஜராத் அணிக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த அணி மாற்றத்துக்கு என கூடுதல் கட்டணம் உண்டு. அதில் குஜராத் அணி, பிசிசிஐக்கு ஒரு பங்கை மும்பை இந்தியன்ஸ் அணி வழங்க வேண்டும். தற்போது அதிலும் பாண்டியாவுக்கு பங்கு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

குஜராத் அணியில் கிடைக்காத விளம்பர வருவாய் பங்கு, மும்பை அணியில் கிடைப்பதால் தான் அவர் அணி மாறுகிறார் என்றும் ஒரு பேச்சு உள்ளது. ஹர்திக் பாண்டியா பேராசையால் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி இருக்கிறாரா?

Story first published: Sunday, November 26, 2023, 20:26 [IST]
Other articles published on Nov 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+