Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னே வழியில் செல்லும் தோனி.. சிஎஸ்கேவின் பயிற்சியாளராக போகும் தல.. நியூசி. கிரிக்கெட் எதிரொலி

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தோனி செயல்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக பயிற்சியாளராக பொறுப்பில் நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீவன் பிளமிங் இருந்தார்.

பிளம்மிங் முதலில் சிஎஸ்கே அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய நிலையில் அவருக்கு வயதானதால் திடீரென்று பயிற்சியாளராக மாறினார். பிளமிங் மற்றும் தோனி ஜோடி இணைந்து சிஎஸ்கே அணிக்கு பல கோப்பைகளை வாங்கி கொடுத்திருக்கிறது.

IPL 2024 - Reports suggesting MS Dhoni might take charge as csk coach role if fleming moves to NZ

தோனியின் எண்ண ஓட்டங்களுக்கு நிகரான பயிற்சியாளராக பிளம்மிங் இருப்பதால் இருவருமே இணைப்பிரியாத சகோதரர்கள் போல் இருந்தார்கள். பிளமிங் கொடுக்கும் யோசனைகளும், அவர் எடுக்கும் முடிவுகளும் தோனி மற்றும் சிஎஸ்கே அணி நிறுவனர் சீனிவாசன் ஆகியோருக்கு பிடித்திருந்தால் இதுவரை பிளமிங்கே பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அனைத்துக்கும் ஒரு முடிவு இருக்கும் அந்த வகையில் தற்போது சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதற்கு காரணம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் புதிய பயிற்சியாளரை தேடும் பணி நடைபெறுகிறது. வரும் டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணி வெல்ல வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே வின் பயிற்சியாளராக இருக்கும் பிளமிங்கை அழைத்து இந்த பணியை கொடுக்கலாம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. உலகக்கோப்பை க்கு தயாராக நியூசிலாந்து அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொடருக்கு பிளம்மிங் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிளமிங் விலகினால் அந்தப் பொறுப்புக்கு தோனியே வரலாம் என தெரிகிறது.

பயிற்சியாளராக தோனி இருந்தால், கிரிக்கெட் விளையாட மாட்டார் என்று பொருள் அல்ல. ஏற்கனவே பயிற்சியாளராகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்த வார்னே பணியாற்றினார். அதுமட்டுமல்லாமல் களமிறங்கிய முதல் சீசனிலேஐபிஎல் கோப்பையில் வென்று கொடுத்தார்.இதனால் அந்த வழியில் தோனியும் பின்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனினும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைத்தால் பிளமிங் செல்வாரா இல்லையா என்பதில் தான் விஷயமே இருக்கிறது.

Story first published: Tuesday, March 19, 2024, 23:55 [IST]
Other articles published on Mar 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+