For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 : ரிங்கு சிங்கின் ஐபிஎல் சம்பளம் சில லட்சம்தான் ஆனா.. யாஷுக்கு 5 கோடி.. ரசிகர்கள் விமர்சனம்

மும்பை : 2024 ஐபிஎல் ஏலத்தில் பல அணிகள் அதிக விலை கொடுத்து வீரர்களை வாங்கியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் ஒருவர் வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயாள்.

யாஷ் தயாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 கோடி கொடுத்து வாங்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால், ரிங்கு சிங் கடந்த ஐபிஎல் தொடரில் இவர் வீசிய கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து தோல்வியடைய வேண்டிய போட்டியில் வெற்றியை பெற்றுத் தந்தார்.

IPL 2024 : Rinku Singh IPL salary is only 55 Lakhs IPL, IPL 2024, IPL auction, IPL auction 2024, mumbai indians, chennai super kings, gujarat titans, lucknow super giants, royal challengers bangalore, kolkata knight riders, punjab kings, delhi capitals, sunrisers hyderabad, rajasthan royals, ipl players list, csk players list, csk, MS dhoni, Rohit sharma, virat kohli, hardik pandya, sanju samson, ஐபிஎல், ஐபிஎல் 2024, ஐபிஎல் ஏலம், சென்னை சூப்பர் கிங்ஸ், சிஎஸ்கே, தோனி, ரோகித் சர்மா, விராட் கோலி, ipl auction, ipl 2024 auction, ipl 2024 mini auction, ipl auction 2024 date and time, ipl auction 2024 players list, ipl auction csk, ipl 2024 mini auction rcb, ipl 2024 auction rules, ipl auction 2024 full players list with price, ipl mini auction 2024 purse remaining for teams, Indian Premier League mini auction

ரிங்கு சிங் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரை 2022 ஐபிஎல் ஏலத்தில் அந்த அணி 55 லட்சத்துக்கு வாங்கி இருந்தது. தற்போது ரிங்கு சிங்கின் ஐபிஎல் சம்பளம் 55 லட்சம் மட்டுமே. ஆனால், அவரிடம் அடி வாங்கிய யாஷ் சம்பளம் 5 கோடி. இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

யாஷ் தயாள் சராசரியான பவுலர் எனும் நிலையில் அவருக்கா 5 கோடி? என்ற விமர்சனம் ஒருபுறமும், அவரை விட திறமைசாலியன ரிங்கு சிங்கிற்கு வெறும் 55 லட்சம் தான் சம்பளம் என்றால் ஐபிஎல் ஏல முறையில் உள்ள குளறுபடிகள் தான் இதற்கு காரணம் எனவே அதை மாற்ற வேண்டும் என மற்றொரு விமர்சனமும் எழுந்துள்ளது.

யாஷ் தயாள் கடந்த 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 பந்தில் 28 ரன்கள் தேவை எனும் நிலைஇருந்தது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரில் ரிங்கு சிங் அந்த ஐந்து பந்துகளிலும் சிக்ஸ் அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

அப்போது முதல் யாஷ் தயாள் மீது கடும் விமர்சனம் இருந்தது. இந்த நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அவரை விடுவித்தது. பெங்களூர் அணிக்கு நல்ல வேகப் பந்துவீச்சாளர் தேவை எனும் நிலையில் அந்த அணி யாஷ் தயாளுக்கு 5 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. ரிங்கு சிங் அடுத்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியால் விடுவிக்கப்பட்டு, அதே அணியால் மீண்டும் பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Wednesday, December 20, 2023, 20:17 [IST]
Other articles published on Dec 20, 2023
English summary
IPL 2024 : Rinku Singh IPL salary is only 55 Lakhs feels fans as Yash Dayal picks up 5 crores from RCB.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+