Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாரா அலி கான், அனன்யா பாண்டே ஹாட் வீடியோ.. ஸ்க்ரீன்ஷாட் வெளியானதால் சர்ச்சை.. சிக்கலில் ரியான் பராக்

சென்னை : பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடி ராஜஸ்தான் இளம் வீரர் ரியான் பராக் பார்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3வது இடத்தில் நிறைவு செய்துள்ளது. இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணியின் பயணம் குவாலிஃபையர் 2வது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

IPL 2024 Riyan Parag landed in a fresh controversy after the Sara Ali Khan and Ananya Pandey hot video Youtube search history leaked


அதேபோல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு சிறந்த சீசனாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார். இதனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரியான் பராக்கை தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் யூட்யூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூட்யூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார்.

அப்போது சில பதிப்புரிமை இசையை யூ-ட்யூபில் தேடினார். இதில் தான் ரியான் பராக் பிரச்சனையில் சிக்கினார். யூட்யூபில் இசையை தேடிய போது, அவர் திரையை மறைக்க மறந்துவிட்டார். அப்போது அவரது தேடல் ஹிஸ்ட்ரியில் பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே ஹாட், சாரா அலி கான் ஹாட் என்று வெளிப்படையாக தெரிய வந்தது.

இதனால் ரியான் பராக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் சோசியல் மீடியாவில் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Monday, May 27, 2024, 22:47 [IST]
Other articles published on May 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+