IPL 2024 : சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா.. குண்டைத் தூக்கிப் போட்ட அம்பதி ராயுடு
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா வர வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் துவங்கி இருக்கிறது. முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு அளித்த பேட்டியால் இந்த பேச்சு கிளம்பி இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா சமீபத்தில் நீக்கப்பட்டார். 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட உள்ளார். அதே சமயம், சிஎஸ்கே அணியில் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது.

ரோஹித் சர்மா தனது கேப்டன் பதவி பறிப்புக்கு பின் மும்பை இந்தியன்ஸ் அணி மீது அதிருப்தியில் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரோஹித் சர்மா மும்பை அணியிலேயே இருக்க மாட்டார். அந்த அணி அவரை தக்க வைக்காமல் நீக்கி விடும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா எந்த அணியில் இடம் பெறுவார் என பலரும் இப்போதே கணித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்பதி ராயுடு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரோஹித் சர்மா இன்னும் 5 - 6 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் ஆடுவார் எனவும், அவர் கேப்டனாக இருக்க முடிவு செய்தால் இந்த உலகமே அவருக்காக திறந்து இருக்கிறது. அவர் எங்கே விரும்புகிறாரோ அங்கே கேப்டனாக இருக்கலாம் எனவும் கூறி இருக்கிறார்.
அத்துடன் நிற்காமல் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா ஆட வேண்டும் என தான் விரும்புவதாகவும், தோனி ஓய்வு பெற்ற பின் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணியை வழிநடத்த வேண்டும் எனவும் அம்பதி ராயுடு கூறி இருக்கிறார். அவரது பேட்டி சமூக ஊடகங்களில் தோனி மற்றும் ரோஹித் சர்மா ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. இது நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications