IPL 2024 : ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இளம் வீரர்.. மும்பை இந்தியன்ஸ் இதை செய்தால் சோலி முடிந்தது
மும்பை : 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை இழந்து இருக்கிறார் ரோஹித் சர்மா. இந்த நிலையில் அவருக்கு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பலரும் ரோஹித் சர்மா துவக்க வீரராக மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்வார் என கூறி வரும் நிலையில், சிலர் ரோஹித் சர்மாவை இம்பாக்ட் வீரராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். அதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கி ஆடினர். சில போட்டிகளில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு இம்பாக்ட் வீரராக ஆடிய நேஹால் வதேரா துவக்க வீரராக ஆடினார்.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தி விட்டு, நேஹால் வதேராவை துவக்க வீரராக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அது மட்டும் நடந்தால் அது ரோஹித் சர்மாவை கடுமையாக பாதிக்கும்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரை மையப்படுத்தி ரோஹித் சர்மா காய் நகர்த்தி வருகிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்த நிலையில் எப்படியாவது 2024 டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி விட வேண்டும் என முடிவு செய்து டி20 அணிக்கு திரும்பி இருக்கிறார்.
எனவே, ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக ஆடி தனது டி20 பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ரோஹித் சர்மா. கடந்த 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மட்டுமே சதம் அடித்து இருக்கிறார். எனவே, அவரது டி20 பேட்டிங் ஃபார்மை சரி பார்த்துக் கொள்ள ஐபிஎல் தொடர் முக்கியமான ஒன்றாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் அது ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட பேட்டிங் ஃபார்மை பாதிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications