Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக்கை பழிதீர்த்த ரோகித்.. டி20 உலக கோப்பையில் காத்திருக்கும் பெரிய ஆப்பு.. பண்ட்க்கு பொறுப்பு

மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணி வரும் மே ஒன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரின் கேப்டனாக ரோகித் சர்மா தான் செயல்பட போகிறார் என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது.

தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர், ரோகித் சர்மாவும் அண்மையில் மும்பையில் சந்தித்து பேசியதே இதற்கு சான்றாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு ரோகித் சர்மா பெரிய ஆப்பு ஒன்றை வைக்க தயாராக இருக்கிறார்.

IPL 2024 - Rohit sharma takes revenge on Hardik Pandya in t20 world cup 2024


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்த நிலையில் அவரை அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா அந்த பொறுப்பை பெற்றுக் கொண்டார். இது இரு தரப்பு வீரர்களுக்கு மத்தியில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்த சூழலில் இந்த பிரச்சனை கொஞ்சம் ஆறி இருக்கின்றது.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பெரிய ஆப்பை கேப்டன் ரோகித் சர்மா வைக்க இருக்கிறார். அதன்படி டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றாலும் அவருக்கு துணை கேப்டன் பதவி கிடைக்காத வகையில் காய் நகர்த்தி இருக்கிறார். அந்த வகையில் டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் இருந்து வந்தார்.

தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவிக்கு வந்திருப்பதால், ஹர்திக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஹர்டிக் பாண்டியா அந்த பொறுப்பிற்கு வர ஆர்வம் காட்டவில்லை மேலும் ரிஷப் பந்த் அல்லது சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திருக்கிறார்.

மேலும் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்ற வகையில் சிவம் துபேவையும் அணியில் எடுக்க ரோகித் சர்மா ஆர்வம் காட்டி வருகிறார். சிவம் துபேவா? ஹர்திக்கா என வந்தால் சிவம் துபேவை வைத்துவிட்டு மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் பிளேயிங் லெவனில் சேர்த்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பெரிய ஆப்பாக தயார் செய்து வருகிறார். துணை கேப்டன் என்ற பதவி வந்தால் பிளேயிங் லெவன் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க நேரிடும் என்பதால் ரிஷப் பந்த் அல்லது சூர்யா குமார் யாதவுக்கு இந்த பொறுப்பை வழங்க ரோகித் சர்மா காய் நகர்த்தி வருகிறார்.இது ஹர்திக் தரப்பை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

Story first published: Monday, April 29, 2024, 19:19 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+