Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 5 ஓவரில் 62 ரன்கள்.. வேட்டையாடிய சஞ்சு சாம்சன்.. குஜராத் பவுலர்களை பொளந்த ரியான் பராக்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற 197 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ராஜஸ்தான் அணி சார்பாக ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி காளமிறங்கியது. வழக்கமாக முதல் ஓவரிலேயே அதிரடியாக தொடங்கும் ஜெய்ஸ்வால், இந்த இன்னிங்ஸை நிதானமாக தொடங்கினார்.

IPL 2024 RR vs GT Rajasthan Royals set a target of 197 runs for Gujarat Titans to win at Jaipur

உமேஷ் யாதவ் பவுலிங்கில் 4 பவுண்டரிகளை விளாசிய ஜெய்ஸ்வால், தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் ரஷீத் கான் வீசிய 6வது ஓவரில் பட்லர் 8 ரன்களில் வெளியேற, ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் கூட்டணி இணைந்து விளையாடியது.

இதனால் குஜராத் அணி தரப்பில் நூர் அஹ்மத் - ரஷீத் கான் இருவரும் அட்டாக்கில் வர, ராஜஸ்தான் அணி நிதானமாக பேட்டிங் செய்தது. 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ரியான் பராக் தனது அட்டாக்கை தொடங்கினார். நூர் அஹ்மத் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர்களை விளாசிய ரியான் பராக், மோகித் சர்மா பந்தில் சிக்சர் அடித்து 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

இதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சனும் அட்டாக்கை தொடங்கினார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 15வது ஓவரில் 2 ஃபோர்ஸ், ஒரு சிக்ஸ் உட்பட 16 ரன்களை விளாசினார். அதன்பின் மோகித் சர்மா வீசிய 117வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, கேப்டன் சஞ்சு சாம்சனும் 31 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். இது சஞ்சு சாம்சனின் 25வது அரைசதமாகும். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.

தொடர்ந்து 19வது ஓவரை வீசிய மோகித் சர்மா பவுலிங்கில் 15 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அதிரடியாக ஆடிய ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 177 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச உமேஷ் யாதவ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 6, 1, 6, 2, 1, 1 மற்றும் 2 ஒய்டுகள் உட்பட 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 2 சிக்ஸ், 7 ஃபோர்ஸ் உட்பாட் 68 ரன்களை விளாசினார்.

Story first published: Wednesday, April 10, 2024, 21:34 [IST]
Other articles published on Apr 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+