Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரசிகர்கள் செய்த ஷாக் சம்பவம்.. மன ரீதியிலான பிரச்சனையில் ஹர்திக் பாண்டியா.. ஓபனாக சொன்ன உத்தப்பா!

மும்பை : மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் செய்யும் ட்ரால்கள் அவருக்கு மன ரீதியிலான பிரச்சனையை கொடுத்துள்ளதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. 12 ஆண்டுகளில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் மும்பை அணி வீழ்த்தியதே கிடையாது. இதனால் மும்பை அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஹர்திக் பாண்டியா வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

IPL 2024 RR vs MI Hardik Pandya is dealing with Mental issues says CSK former cricketer Robin Uthappa

இருப்பினும் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகளும் இந்த சீசனில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதுமட்டுமல்லாமல் அகமதாபாத், ஐதராபாத், மும்பை, பஞ்சாப் என்று எந்த மைதானத்திற்கு சென்றாலும் மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கிண்டல் செய்து வருகின்றன்ர். சோசியல் மீடியா தொடங்கி பல்வேறு இடங்களிலும் ஹர்திக் பாண்டியா கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.

இது அவரை மனதளவில் பாதித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசுகையில், ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை மிகவும் வெளிப்படையானது. என்னை பொறுத்தவரை, ஹர்திக் பாண்டியா மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வீரர். எந்த அணிக்காக விளையாடினாலும், உயிரை கொடுத்து விளையாடக் கூடியவர். அவர் இன்னும் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டரை போல் இருக்கிறார்.

அவரின் கிரிக்கெட் காலம் எவ்வளவு என்பது கூட ஹர்திக் பாண்டியாவுக்கு நன்றாக தெரியும். ரசிகர்கள் கிண்டல் செய்வது, ட்ரால் செய்வது, ஃபிட்னஸ் பற்றிய மீம்ஸ் என்று அனைத்தும் அவர் பாதிக்கிறது. எந்தவொரு மனிதரையும் இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கும். இதுபோன்ற சம்பவங்களின் பிரச்சனை எத்தனை மனிதர்களுக்கு புரியுமா என்பது கேள்வி தான். மனரீதியிலான பிரச்சனைகளை ஹர்திக் பாண்டியா சந்தித்துள்ளார்.

ரசிகர்களின் எமோஷன் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஒரு வெறுப்பை எந்த மனிதர் மீதும் வெளிப்படுத்த கூடாது. ஒரு சமூகமாகவே இது தேவையில்லை என்று நினைக்கிறேன். இது சிரித்து கடப்பதை விடவும், எதிர்காலத்தில் எந்த வீரரும் இப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 22, 2024, 14:22 [IST]
Other articles published on Apr 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+