எமனாக மாறிய விராட் கோலியின் செஞ்சுரி.. கதற விட்ட பட்லர், சாம்சன்.. மண்ணைக் கவ்விய ஆர்சிபி
ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் நடந்த 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் விராட் கோலி தானது எட்டாவது ஐபிஎல் சதம் அடித்தார். ஆனால், அந்த சதமே பெங்களூரு அணிக்கு எமனாக மாறியது. அவர் சதம் அடித்தாலும் கடைசி 5 ஓவர்களில் விரைவாக ரன் குவிக்கவில்லை. 200 ரன்கள் குவிக்க வேண்டிய இடத்தில் பெங்களூரு அணி 183 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரிலேயே துவக்க வீரர் ஜெய்ஸ்வாலை இழந்தாலும், மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் பட்லருடன், கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர். சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். முதல் ஓவரில் இருந்து கடைசி வரை களத்தில் நின்ற ஜோஸ் பட்லர் வெற்றியை உறுதி செய்த பின் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20வது ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications