Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா இல்லை.. தோனிக்கு பின் இவர்தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்.. அம்பதி ராயுடு அதிரடி

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு, சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து அதிரடி தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

சிஎஸ்கே ரசிகர்கள் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை என்றால் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜா தான் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என நினைத்து வந்தனர்.

ஆனால், அடுத்த சிஎஸ்கே அணியின் கேப்டன் குறித்து ஒரு பேட்டியில் பேசுகையில் அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா பெயரையே குறிப்பிடவில்லை.

IPL 2024 : Ruturaj Gaikwad will be next Chennai Super Kings Captain says Ambati Rayudu

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி கடந்த 2008இல் ஐபிஎல் தொடர் அறிமுகம் ஆனது முதல் இருந்து வருகிறார். இடையே 2022 ஐபிஎல் தொடரில் ஜடேஜா வசம் அவர் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது முதல் எட்டு போட்டிகளில் மோசமாக செயல்பட்டு சிஎஸ்கே அணி பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பையே இழந்தது.

அதனால், மீண்டும் தோனியே கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2023 ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் களம் கண்ட சிஎஸ்கே அணி அந்த சீசனில் கோப்பை வென்றது. இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பாரா? என்ற சந்தேகம் உள்ளது. அவ்ருகுக் காலில் மூட்டு பகுதியில் பிரச்சனை உள்ளது. அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் தோனி. அதனால் அவர் அதிக பயிற்சிகள் கூட செய்வதில்லை.

இந்த நிலையில், அவரால் 2024 ஐபிஎல் தொடரில் ஆட முடியாமல் போகலாம். அப்போது யாரை கேப்டனாக சிஎஸ்கே நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் மீண்டும் மூத்த வீரரான ஜடேஜாவுக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் என கூறும் நிலையில், அம்பதி ராயுடு அதிரடியாக ருதுராஜ் கெயிக்வாட் தான் அடுத்த கேப்டன் ஆவார் என கூறி இருக்கிறார்.

ருதுராஜ் கெயிக்வாட் இளம் வீரர் ஆவார். சமீபத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தினார். அந்த தொடரில் இந்தியா தங்கம் வென்றது. அதைத் தொடர்ந்து இந்திய டி20 அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். ஆனாலும், அவரது வயது மற்றும் அனுபவத்தை கருத்தில் கொண்டால் அவரை விட பல மூத்த வீரர்கள் சிஎஸ்கே அணியில் உள்ளனர். ஆனாலும், ருதுராஜ் கெயிக்வாட் தான் அடுத்த கேப்டன் என கூறி இருக்கிறார் தோனிக்கு நெருக்கமானவராக கருதப்படும் அம்பதி ராயுடு.

Story first published: Saturday, November 25, 2023, 20:08 [IST]
Other articles published on Nov 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+