IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
மும்பை : 2024 ஐபிஎல் தொடரின் இடையே 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்திய அணித் தேர்வுக் குழு, கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்.
அந்த சந்திப்புக்கு முன்னதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. அதில் முக்கியமானது இந்திய அணியின் துவக்க வீரர்கள் யார் என்பது தான். கேப்டன் ரோஹித் சர்மா ஒரு துவக்க வீரராக ஆடப் போவது உறுதியாகி உள்ளது. ஆனால், மற்றொரு துவக்க வீரராகவும், மாற்று துவக்க வீரராகவும் அணியில் இடம் பெறப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெறாத நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துவக்க வீரர்களாக ஆடி வந்தனர்.
தற்போது ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் சரியாக ரன் குவிக்காததால் அவரை தேர்வு செய்ய வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ருதுராஜ் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இந்திய அணியின் துவக்க வீரர்களாக தேர்வு செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இணைந்து துவக்க வீரர்களாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கும் பட்சத்தில் மாற்று துவக்க வீரராக ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சுப்மன் கில் எப்போதும் பிசிசிஐ-யின் செல்லப் பிள்ளையாக இருப்பதால் அவருக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 7 போட்டிகளில் ஆடி 241 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 40 ஆக உள்ளது ஸ்ட்ரைக் ரேட் 130 ஆக உள்ளது. இதே 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் 7 போட்டிகளில் 263 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 43 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 151 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications