IPL 2024: கோலியை ஓரங்கட்டப் போகும் சாய் சுதர்ஷன்? அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2ஆம் இடம்
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் குவித்த அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 400 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்தார்.
அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 500 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு போட்டியாக மாறி இருக்கும் சாய் சுதர்ஷன் 418 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

2024 ஐபிஎல் தொடரில் சாய் சுதர்ஷன் 10 போட்டிகளில் ஆடி இருக்கிறார். இந்த பத்து போட்டிகளில் அவர் குவித்த ரன்கள் - 45(39), 37(31), 45(36), 33(19), 31(23), 34(29), 12(9), 31(34), 65(39) & 84*(49).
இந்த பத்து போட்டிகளில் ஒரு முறை மட்டுமே 30 ரன்களுக்கும் குறைவாக ரன் சேர்த்து இருக்கிறார். மற்ற ஒன்பது முறையும் 30 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கைக்கு உரிய வீரராக இருந்தார். இதில் கடைசி இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
குஜராத் அணியின் கடைசி நான்கு லீக் போட்டிகளிலும் அவர் இதே போல ரன் குவித்தால் நிச்சயம் விராட் கோலியை முந்த வாய்ப்பு உள்ளது. சாய் சுதர்ஷன் ரன் குவித்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டும் அவருக்கு பலவீனமாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 135.71 ஆக உள்ளது. அதிக ரன் குவித்துள்ள முதல் பத்து வீரர்களில் 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுக்கு கீழ் உள்ள ஒரே வீரர் சாய் சுதர்ஷன் மட்டுமே.
சுயமரியாதைக்காக விளையாடுறோம்.. ஸ்ட்ரைக் ரேட், ஸ்பின் ஆட தெரியலைனு பேசுறவங்க எங்க? விராட் கோலி ஆவேசம்
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 200 ரன்கள் குவித்த நிலையில், 201 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எல்லாம் எட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணியில் விராட் கோலி 70 ரன்களும், வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 100 ரன்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Click it and Unblock the Notifications