ஜெய்ப்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா காயத்தில் இருந்து மீண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறந்த ஐபிஎல் பந்துவீச்சை பதிவு செய்தார். அதிலும் கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
4 ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார் சந்தீப் சர்மா. அதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார் சந்தீப் சர்மா. மேலும், அந்த அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார் சந்தீப் சர்மா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பந்துவீச்சாளர்கள் பட்டியல் -
சோஹைல் தன்வீர் - 2008 - 6/14
ஜேம்ஸ் பால்க்னர் - 2013 - 5/20
ஜேம்ஸ் பால்க்னர் - 2013 - 5/16
சந்தீப் சர்மா - 2024 - 5/18
யுஸ்வேந்திர சாஹல் - 2022 - 5/40
முன்னதாக இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி கடைசி 2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்தது. அதிலும் சந்தீப் சர்மா வீசிய கடைசி ஓவரில் 3 விக்கெட்களை இழந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். இதை அடுத்து ராஜஸ்தான் அணி 18.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.