Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தோல்வி - பிளே ஆப் வாய்ப்புக்கு விழுந்த அடி.. இனி சென்னை அணி என்ன செய்ய வேண்டும்?

சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 59வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் சுற்றுக்கு பெரும் அடி விழுந்திருக்கின்றது.

இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் குறைந்திருந்தாலும், புள்ளி பட்டியலில் தொடர்ந்து நான்காம் இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி ஆறு தோல்வி என 12 புள்ளிகள் உடன் ரன் ரேட்டில் 0.49 என்ற கணக்கில் இருக்கிறது.

IPL 2024 - scenario for csk to qualify for playoff after loss vs GT

இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆப் க்கு செல்ல வேண்டும் என்றால் இனி அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்று நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. சிஎஸ்கே அணி வரும் 12ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும், 18ஆம் தேதி ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றால் 16 புள்ளிகள் உடன் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதே சமயம் மூன்றாவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்க வேண்டும். இதேபோன்று ஐந்தாவது இடத்தில் உள்ள டெல்லி அணி வரும் 12ஆம் தேதி நடைபெறும் ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்க வேண்டும். லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற வேண்டும்.

இதேபோன்று ஆறாவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியோ தோல்வியோ பெறலாம். ஆனால், 17ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக தோல்வியை தழுவ வேண்டும்.ஆர் சி பி அணி ஏழாவது இடத்தில் உள்ளது. அவர்கள் மே 12ஆம் தேதி டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியோ தோல்வியோ பெற வேண்டும்.

மே 18ஆம் தேதி சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக ஆர்சிபி தோற்க வேண்டும். சி எஸ் கே அணி 14 புள்ளிகள் குறைந்தபட்சம் பெற்று மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால், பிளே ஆப்க்கு செல்லலாம். இல்லையென்றால் அடுத்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே தோற்றால் நடையை கட்டிவிடலாம்.

Story first published: Saturday, May 11, 2024, 0:07 [IST]
Other articles published on May 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+