சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வார போட்டி அட்டவணை மட்டுமே முதலில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முழு போட்டி அட்டவணை வெளியாகி இருக்கிறது.
2024 நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கும் முன்பே ஐபிஎல் அட்டவணையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் முதற்கட்டமாக இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டுமே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவித்த பின் மற்ற போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும் என பிசிசிஐ கூறி இருந்தது. சிலர் இரண்டாம் பாதி ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடைபெறவும் வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்த நிலையில் முழு ஐபிஎல் தொடரும் தேர்தலுக்கு மத்தியில் இந்தியாவிலேயே நடைபெற உள்ளது உறுதியாகி இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் முழு ஐபிஎல் அட்டவணையில் இறுதிப் போட்டி நடக்கும் நாளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது, மே மாதம் 26ஆம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதுவும் இறுதிப் போட்டி நீண்ட காலத்துக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. பிளே - ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதிப் போட்டியும் சென்னையிலேயே நடைபெற உள்ளது.
சிஎஸ்கே அணி ஆடும் போட்டி அட்டவணை எழுத்திலும், ஒட்டுமொத்த பத்து ஐபிஎல் அணிகள் பங்கேற்கும் போட்டி அட்டவணை, தேதி, நேரம் புகைப்படமாகவும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மார்ச் 22 - 7:30 pm - சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - மார்ச் 26 - 7:30 pm - சென்னை
டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மார்ச் 31 - 7:30 pm - விசாகப்பட்டினம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஏப்ரல் 5 - 7:30 pm - ஹைதராபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஏப்ரல் 8 - இரவு 7:30 - சென்னை
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஏப்ரல் 14 - 7:30 pm - மும்பை
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஏப்ரல் 19 - 7:30 pm - லக்னோ
சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஏப்ரல் 23 - 7:30 pm - சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஏப்ரல் 28 - 7:30 pm - சென்னை
சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மே 1 - இரவு 7:30 - சென்னை
PBKS vs சென்னை சூப்பர் கிங்ஸ்- மே 5 - 3:30 pm - தர்மசாலா
குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்- மே 10 - 7:30 pm - அகமதாபாத்
சென்னை சூப்பர் கிங்ஸ் vs RR - மே 12 - 3:30 pm - சென்னை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்- மே 18 - 7:30 pm - பெங்களூரு


கடந்த மார்ச் 22 அன்று ஐபிஎல் தொடர் திட்டமிடட்டபடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று இருந்தது.